Search keywords

The apt keywords for this website are swami desikan, Krishna charitam, yaadhavaabhyudhayam, krishna history, yadhava's story, lord krishna, anjsanj, desikan's kaaviyam, vishnu puranam, hari vamsam, srimad baghavatham, yadhavabhudhayam, yadhavabudhaya, swamy desikan's yadhavabhudhayam ,ஸ்வாமி தேசிகன், கிருஷ்ண சரித்ரம், யாதவாப்யுதயம்



Wednesday, September 15, 2010

யாதவாப்யுதயம் (२-ம் ஸர்கம்)



யாதவாப்யுதயம்(ஸர்கம்-2)






YADAVABHYUDHAYAM(SARGAM-2)






YAADAVAABHUDAYAM (II SARGAM)


யாதவாப்யுதயம் (2-ம் ஸர்கம்)

இந்த ஸர்கத்தில் தேவகீ வர்ணனம், மற்றும் கிருஷ்ண ப்ராதுர்பாவம் முதலானவற்றை ஸ்வாமி தேசிகன் விவரிக்கிறார் இதில் தொண்ணூற்றேழு ஸ்லோகங்கள் உள்ளன.
1. அதாகமாநாம் அநகேந பூம்நா
தர்மஸ்ய பூர்ணேந தநாகமேந

திவௌகஸாம் தர்சயதா விபூதிம்

தேவீ பபௌ தௌஹ்ருதலக்ஷணேந


தேவியான தேவகி கர்ப்பவதியானாள். அதன் அடையாளம் தோன்றுகிறது. ஆகமங்களின் தூய்மை கலந்த நிறைவோ தர்மத்தின் பூரணமான பணப்பெருக்கோ தேவர்களின் வைபவத்தைக் காண்பிக்கும் குறியோ எனலாம் படி இருக்கின்றது இந்த கர்ப்பலக்ஷணம்.


2. ச்ருங்கார வீராத்புதசித்ரரூபம்

கர்ப்பே த்ரிலோகைகநிதிம் வஹந்த்யா:

பராவர க்ரீடித கர்புராணி

த்வேதா பவந் தௌஹ்ருதலக்ஷணாநி

இதற்கு முன் ஸ்லோகத்தில் கர்ப்பசின்னங்களைக் கூறும்பொழுது மூன்று பெருமைகளைக் கூறினார். இங்கு அவைகளை இரண்டு கூறாக பகுத்து அறியலாம் என்கிறார். ச்ருங்காரம்,வீரம்,அத்புதம் என்ற மூன்று வகையான ரஸங்களை கலந்த சித்திரமேனியுடையவனான். மூவுலகங்களுக்கும் ஒரே நிதியாய் விளங்குபவன். இத்தகைய எம்பிரானை தேவகி கர்ப்பத்தில் தரிக்கிறாள். பரத்துவத்தைக் காணவல்ல குறிகளும், சாதாரணத்துவம்(அவரத்துவம்) காணவல்ல குறிகளும் இணைந்து விளங்கின. இரண்டு விதமான விளையாட்டைச் செய்பவனாக விளங்கினான்.


3. அசேஷவேதைரதிகம்யபூம்நா

ஸித்தேந ஸித்தைஸ்ச நிஷேவிதேந

அமாநுஷீ நூநம் அபூத் அயத்நாத்


க்ருஷ்ணேந கேநாபி ரஸாயநேந

எல்லா வேதங்களாலும் போற்றப்பெற்ற பெருமையுடையதும், எப்போதுமே ஸித்தமாயிருப்பதும், ஸித்த புருஷர்களாலே உபயோகிக்கப்பெற்றதுமான கருப்பு நிற ரசாயனம் ஒன்றை தேவகி உட்கொண்டுவிட்டாள் போலும். வேறு ஓர் முயற்சியுமின்றி அவள் அமாநுஷியாகி விட்டாள்.

4. ஸத ஹ்ரதா பந்துரயா ஸ்வகாந்த்யா

ஸஞ்சாரி ஜாம்பூநதபிம்பகல்பா

த்ரய்யந்தஸித்தேந ரஸாயநேந

காலேந பேஜே கலதௌதலக்ஷ்மீம்


முன் ஸ்லோகத்தில் பரத்வத்தைக் காண்பிக்கவல்ல கர்ப்பலக்ஷணத்தை விளக்கினார். இதில் வெளிப்படையான உலகரீதியில் கர்ப்பவதிகளின் உடலில் ஏற்படும் மாறுதல்களையும் அதன் பொலிவையும் விளக்குகிறார்.

தேவகியின் திருமேனி தனிப்பொலிவுடன் விளங்கியது. அவளது காந்தி மின்னல் போன்றதொரு அழகைப் பெற்றுவிட்டது. தங்கப்பதுமையும் நடந்து வருமோ என்று எண்ணவல்ல நிலை. அவள் வேதாந்தங்களில் ஏற்பட்டதொரு ரஸாயனத்தை உள்ளே கொண்டுள்ளாள். அதனாலே அவள் காலக்ரமத்தில் மேனியில் வெண்மையைப் பெற்றுள்ளாள். இதுவும் எவ்வளவு லக்ஷ்மீகரமாயிருக்கிறது.

5. மயூர பிஞ்ச்ச த்யுதிபிர் மயூகை:

தத்காந்திர் அந்தர்வஸதஸ் த்ரிதாம்ந:

ச்யாமா பஹிர் மூலஸிதா பபாஸே

மங்கல்ய ரத்நாங்குர பாலிகேவ

தேவகியின் திருமேனியில் ஒரு பொலிவு ஏற்பட்டுள்ளது. அந்த சோபையை கவி தனது கண்களால் பார்க்கிறார். கருவுக்குள் வசிப்பவன் மூன்று வகையான சோதி வடிவுடையான். அவ்வொளி வெளியில் தோற்றம் அளிக்கிறது. மயில் தோகையின் நிலையும் நிறமும் எனலாம்படி இருக்கிறது. திருமேனி வெளுப்பு. ஆனால் அதன் பளபளப்பு கறுப்பு எனும்படி உள்ளது. மங்கல கார்யங்களுக்கு சுபஸூஸகமாக பாலிகை வளர்ப்பார்கள். அது முளைக்கின்றபோது அடியில் வெளுத்தும் நுனியில் கருத்தும் இருக்கும். அதுபோல் தேவகியின் திருமேனி வெளுப்பு நிறம் பெற்று அதன் மேலும் கறுப்பு நிறமும் ஓடுகிறது. கர்ப்பஸ்திரீகளின் காந்தி மாற்றம் உன்னிப்பாக கவனிப்பவர்களுக்கே விளங்கும்.

6. காலே பபாஸே வஸுதேவபத்ந்யா:

கர்பூர லிப்தேவ கபோலசோபா

சசிப்ரபா ஸப்தமகர்ப்பகாந்தி:

ச்யுதாவசிஷ்டேவ சநைருதீர்ணா

தேவகியின் கபோல பாகம்(கன்னம்) மிகவும் அழகாக விளங்கியது. கர்ப்பம் வளர வளர இத்தகைய சோபை ஏற்படுவது இயற்கை. கர்ப்பூரத்தினால் பூசப்பட்டதோ என்று சொல்லத்தக்கதான காந்தி. ஏழாவது கர்ப்பத்தில் ஏற்பட்ட வெளுப்பு ஏற்கனவே மிஞ்சியிருந்தது. இப்பொழுது அது மெல்லியதாக தோன்றும்படியானதாக தற்போதைய காந்தி இருந்தது. இந்த வெளுப்பு சந்திரனின் ஒளியை ஒத்திருந்தது. இது சந்திர வம்சத்தின் அம்சம் எனும்படியாக இருந்தது.


7. நவேந்து நிஷ்யந்த நிபஸ் சகாஸே

வர்ண: ப்ரதீகேஷு மதுத்ரவாங்க்யா:

அந்தஸ் ஸ்த்திதேந ப்ரதமேந பும்ஸா

ப்ரவர்த்திதம் ஸத்வமிவாவதாதம்


தேவகியின் திருமேனி மதுமயமாயிற்று.அவளது அங்கங்களில் ஒரு அழகான வர்ணம் ஓடுகிறது. புதியதான சந்திரனிடமிருந்து பெருக்கெடுத்த அமுதத்தின் பெருக்கோ என்று சொல்லும்படியான அழகு! உள்ளே ஆதிபுருஷன் அமர்ந்து இருக்கிறான். அவன் தான் மேலே ஸத்வகுணத்தை ப்ரவர்த்தனம் பண்ணுகிறான் போலும். (ஸத்வம் என்பதற்கு வெளுப்பும் பொருளன்றோ).


8. கரம்பிதா கிஞ்சிதிவ ப்ரஸ்ருப்தை:

தேஜோபிர் அந்தர்வஸதஸ் த்ரிதாம்ந:

மரீசிபி: ஸ்வைரபவத் ப்ரஜாநாம்

மங்கல்ய ரத்நாங்குர பாலிகேவ

தேவகியின் திருமேனியில் தனித்ததொரு ஒளி படர்ந்திருக்கிறது. மேற்புறம் சிறிதே படர்ந்தததால் நிறங்கள் கலந்தே நிற்கின்றன. உள்ளே வசிக்கும் த்ரிதாமாவினால் ஏற்பட்ட ஒளிகள் இவை. தேவகியின் திருமேனி காந்திகளும் ஒன்றாகச் சேர்ந்தன. அப்பொழுது மங்கள காரியத்திற்கு அமைக்கப்பெற்ற பாலிகை போல் அவள் திருமேனி விளங்கியது. (தேவகியின் திருமேனியை ஐந்தாவது ஸ்லோகத்தில் வர்ணித்தார் ஸ்வாமி. இப்பொழுதும் அந்த அனுபவம் கண்ணை விட்டு அகலாததாலும், மங்கலபாலிகை மனதை விட்டு அகலாததாலும் மேன்மேலும் அந்த தாத்பர்யத்தையே திருவுள்ளத்தில் இறுத்தி உவந்து விவரிக்கிறார்)


9. தஸ்யாஸ் ஸுதோல்லாஸ ஜுஷ: கடாக்ஷா:

ஸங்க்ஷுப்த துக்தோததி ஸௌம்ய பாஸ:

ஜகத் த்ரயீ ஸௌத விலேபநார்ஹாம்

விதேநிரே வர்ணஸுதாம் அபூர்வாம்

ரஸரூபியாகவும், தேஜோரூபியாகவும் எம்பெருமான் கர்ப்பத்தில் எழுந்தருளி இருக்க தேவகி பெற்ற திருமேனிப் பொலிவை பல கோணங்களில் ஸ்வாமி வர்ணித்து வருகிறார். தேவகியின் கடைக்கண் பார்வைகள் திருப்பாற்கடல் அமுதம் போல் விளங்குகின்றன. பார்வைகள் விழும் இடமெல்லாம் அபூர்வமான வர்ணம் பூசப்பட்டது போல் காட்சியளிக்கிறது. மூன்று உலகங்களின் உப்பரிகைகளும் சுண்ணாம்பு அடிக்கப்பெற்றது போல காட்சி அளித்தது.(மூன்று உலகங்களும் தனிநிறம் பெறப்போகின்றன என்பது ஸ்வாமியின் திருவுள்ளம்).

10. ரக்ஷாவிதௌ ராக்ஷஸதாநவாநாம்


காராக்ருஹே கம்ஸநியோகபாஜாம்


ஸம்பச்யமாநா ஸக்ருதீக்ஷிதா வா


ஸங்க்ஷோபயாமாஸ மநாம்ஸி ஸைஷா


இவள் காராக்ருஹத்தில் ரக்ஷைக்காக கம்சனால் அமர்த்தப்பட்ட அஸுரர், மற்றும் ராக்ஷதர்களுக்கு பெருங்குழப்பத்தை ஏற்படுத்திவிட்டாள். ஒரு முறை இவள் பார்த்தாலும் சரி, அல்லது அவர்களால் பார்க்கப்பட்டாலும் சரி, அவர்கள் நடுங்கலாயினர்.9 ஸ்லோகம் வரை தேவகியின் கர்ப்ப லக்ஷணத்தை விவரித்தார். இதில் அவளைக் காண்பவர்களின் நிலையைக் கூறுகிறார்.


11. புக்தா புரா யேந வஸுந்தரா ஸா


ஸ விச்வபோக்தா மம கர்ப்பபூத:


இதி த்ருவம் ஸூசநம் ஆசரந்தீ


த்தாத்ருசம் நாடிதகம் ததாந


இதற்கு முன் எவனால் பூமி அனுபவிக்கப் பெற்றதோ அவனே(உலகத்தை அனுபவித்தவனே) எனது கர்ப்பத்தில் எழுந்தருளிவிட்டான். இந்த உண்மையை குறிப்பிடும் வகையில் விலக்ஷணமானதொரு செயலைச் செய்தாள். கர்ப்பிணிகள் இயற்கையாகவே மண்ணை ருசித்து சாப்பிடுவதுண்டு. இந்த நிலையை தேவகி அடைந்தாள். மேலும் தேவகி மண்ணையுண்டாள் என்றால் அதன் காரணத்தை ஊகித்துக் கொள்ளவேண்டும். (ஆதி வராஹாதிரூபேண தேவதாரூபா வா, ரகுநாதாதிரூபேண கோலகரூபா வா உப பக்தா) ஆதிவராகனாயிருந்து கையில் மண்ணை ஏந்தி வந்ததும், பண்டு ஆலிலையில் துயில்கொண்டபொழுது வயிற்றில் பூமியை வைத்திருந்தவனுமான பெருமான் என் வயிற்றில் பிறக்கப் போகிறான், ஆதலால் தான் மண்வாசனை தேவகியை ஈர்த்தது போலும்)

12. ஸமாதி ஸுக்ஷேத்ரக்ருஷீவலாநாம்

ஸந்தோஷ ஸஸ்யோதய மேககாந்த்யா


சகாஸ தஸ்யா ஸ்தந சூசுகாபா


கர்ப்பத்விஷா காடமிவாநுலிப்தா


ஸமாதி என்பது நல்ல நிலம். அதில் க்ருஷி செய்பவர்கள் யோகிகள். அவர்களுக்கு ஏற்படும் ஸந்தோஷம் என்கிற பயிருக்கு மேகம் போல் ஒளிபெற்றது கர்ப்பகாந்தி. அந்த காந்தியினால் ஓர் வகையான பூச்சைப் பெற்றதோ என்று சொல்லவல்லதாய் இருப்பது தேவகியின் ஸ்தனங்களின் நுனிபாகம்.மேகம் எவ்வளவு கறுத்திருக்கிறதோ அவ்வளவு ப்ரகாசம் உண்டு. அதே போல் ஸாலம்பந யோகத்தால் இந்த கர்ப்பகாந்தி மேகத்தை ஒத்து விளங்கியது.


13. கஸ்தூரிகா காம்ய ருசிஸ்ததீயா


ரம்யா பபௌ சூசுகரத்ந காந்தி:


தத்கர்ப்ப ஸந்தர்சந லோலுபாநாம்


அந்தர்த்ருசாம் அஞ்சநகல்பநேவ


ஒளிமயமான ஸ்லோகம். கஸ்தூரியே விரும்பவல்ல காந்தி என்று பொருள். கஸ்தூரியின் நிறம் கறுப்பு. கறுப்பின் அழகு வேறெதிலும் இல்லை. கறுப்புக்கு வேறு உதாரணம் கூறலாம். ஆனால் இங்கு இவ்வாறு கூறியதில் பல ரஸமுண்டு. கஸ்தூரி விலை உயர்ந்த வஸ்து. எம்பெருமான் திலகம் தரிப்பது கஸ்தூரியினால்தான். கஸ்தூரி திலகம் லலாடபாகே என்று கூறுவர். தேவகியின் முலைநுனி இந்திரநீலமணிகளின் காந்தி போன்று இருந்தது. கஸ்தூரியே அந்த காந்தியைப் பெற விரும்பியது போல இருந்தது. அவளது கர்ப்பத்தினால் ஏற்பட்ட நிலை அது. எம்பெருமானை சேவிக்கவேண்டும் என விரும்பியோர்க்கு அஞ்சனம் பூசியது போன்று அது திகழ்ந்தது.பூமியின் உள்ளிருக்கும் புதையலை காண நேத்ராஞ்சனம் இடுவது போல் அஞ்சன வண்ணனை காண வேண்டும் என்ற உள்நோக்கு உடையோர்க்கு மைப்பூச்சாக அமைந்ததோ!



14. பராவராணாம் ப்ரபவஸ்ய பும்ஸ:

ப்ரகாசகத்வம் ப்ரதிபத்யமாநாம்


அபாவயந் பாவித சேதஸஸ் தாம்


வித்யாமயீம் விஷ்வ பிதாமஹீஞ்ச


ரிபக்குவமான நிர்மலமான உயர்மதிநலம் படைத்த மஹான்கள் அண்ட சராசரங்களுக்கெல்லாம் காரணமான பரமபுருஷனை வெளிப்படுத்தும் சிறந்த நிலையில் உள்ள அத்தேவகியை வித்யையாகவும் விச்வங்களுக்கெல்லாம் பிதாமஹியாகவும் கண்டு கொண்டனர்.பகவான் இவ்வுலகத்திற்கெல்லாம் தந்தையாக விளங்குபவன். அவனுக்கே தாயென்றால் மற்றவர்களுக்கு பிதாமஹிதானே!


15. லிலேக விச்வாநி ஜகந்த்யபிக்ஞா


லீலாஹ்ருதே சித்ரபடே யதார்ஹம்


ப்ராய: ப்ரஜாநாம் பதய: ப்ரதீதா:


யந் மாத்ருகா: ஸ்வேஷு விதிஷ்வபூவந்


எல்லாம் நன்கே அறிந்து வைத்திருந்த தேவகி லீலைக்காக கொண்டு வரப்பட்ட சித்திரபடத்தில் ஓவியம் தீட்டவல்ல துணியில் உலகங்கள் அனைத்தையும் ஏற்றவாறு வரைந்தாள். ப்ரஜாபதிகள் என்று ப்ரஸித்தி பெற்ற ஸ்ருஷ்டிகர்த்தர்கள் இந்த சித்திரத்தையே மனதில் கொண்டு அமைந்தனரோ அல்லது தங்கள் தங்கள் செயல்களில் இவற்றையே மாத்ருகையாக கொண்டனரோ என்று சொல்லும் பாங்கில் அமைந்தது தேவகி தீட்டிய ஓவியம்.


16. நிராசிஷாம் பத்ததி மாததாநா

நைச்ரேயஸீம் நீதிம் உபக்நயந்தீ

புண்யாசயா பூர்வ யுகப்ரரோஹம்
இயேஷ தேவீ புவநே விதாதும்:

எதிலும் அபிலாஷை இல்லாத விரக்தர்களின் மார்க்கத்தை அடைந்தவளான தேவகி முக்திக்கு உபயோகமானதொரு நீதியை அடைந்தவளாயும், வெளியில் மனத்தைச் செலுத்தாத நிலையை பெறுகின்றவளாயும், நல்ல உள்ளம் படைத்தவளாயும் விளங்கினாள். உலகின் முந்தைய யுகத்தின்(க்ருதயுகம்) முளைத்தலாகிய தோற்றத்தை ஏற்படுத்த விளங்கினாள்.

17. அநாப்த பூர்வம் கிம் அபேக்ஷிதும் தே

கிம் வோபதத்யாம் அதவாதுநேதி

வயஸ்யயா பாவவிதா நுயுக்தா

ந கிஞ்சித் இத்யேவ ஜகாத நாதா

இதுவரை நீ அடைந்திராத ஏதாகிலும் வேண்டும் என்று நினைக்கின்றாயோ அல்லது இதுவரை நீ அநுபவித்ததில் உனக்கு மிகவும் பிடித்தமானது ஏதாகிலும் வேண்டுமா? என்ன வேண்டும் என்று சுவடறிந்த தோழி கேட்கின்றாள். ஒன்றும் வேண்டாம் என்று பதில் கூறினாள் தேவகி. அவள் நாதையன்றோ! அவளை வற்புறுத்த இயலுமோ?



18. அநாதரே தேவி ஸகீஜநாநாம்

கதம் ந தூயேத தயா தவேதி


உபஹ்வரே ஸல்லபிதா மநோக்ஞை:


ஆலோகதை: உத்தரம் ஆசசக்ஷே


தேவகியின் ஸகிகள் பலர்.அவளதுஅன்பிற்கு அடிமையானவர்கள். தேவகி தேவியாகின்றாள். அவளது அந்தஸ்து மிகப் பெரியது. அதைப் பெறும் பேறாக நினைப்பவர்கள் அவள் தோழிகள். அவர்களிடம் சுள்ளென்று ஒன்றும் வேண்டாம் என சொல்லலாமோ?அதனால் தோழிமார்களுக்கு பெரும் கலக்கம் ஏற்பட்டது. தோழிமார்களை இவ்வாறு அநாதரம் செய்யலாமோ? அப்பொழுது அழகு ததும்பும் பார்வையால் அவள் பதிலளித்தாள். வாயினால் தான் பதிலளிக்க வேண்டும் என்றில்லை. கர்ப்பத்தின் வளர்ச்சியாலும் சரீரத்தின் தளர்ச்சியாலும் வாயால் சொல்லாமல், எனக்கு ஏன் தயையில்லை? என் வயிற்றில் இருப்பவன் தயைக்கு சொந்தக்காரன் ஆயிற்றே! அவனைச் சுமப்பவளான நானும் அதே போல் தயை செய்வேன் என்று அழகாக அவர்களைப் பார்த்தாள். இதுவே அவர்களுக்கு பேரின்பத்தை அளித்துவிட்டது.


19. அசேத ஸா காமம் அஜாத நித்ரா

மாதும் ப்ரவ்ருத்தேவ பதாநி சக்ரே

அத்யாஸ்த லோகாந் அவதீரயந்தி

பத்ராஸநம் பாவிதபாரமேஷ்ட்யா


இந்த ஸ்லோகத்தில் கர்ப்பிணிகளின் அவஸ்தைகளை விவரிக்கிறார். மூன்று அவஸ்தைகள். சயனம், கமநம், ஆசநம் முதலியன. கமநம் என்பதற்கு விருப்பம் போல் என்று பொருள். தூக்கமேயில்லாத தேவகி எப்பொழுதும் சயனித்து இருந்தாள். சில சமயங்கள் மெள்ள மெள்ள அடிமேல் அடிவைத்து நடந்தாள். யாருமே அவளுக்கு லக்ஷியத்தில் இல்லை. யாரையும் மதிக்கவில்லை. எங்கு தோன்றுகிறதோ அங்கு உட்காரலானாள். உலகை நடத்தும் பெரிய ராணி மாதிரியே உயர்ந்த ஸ்தானத்தில் அமர்ந்தாள். இவையெல்லாம் கர்ப்பவதிகளின் அவஸ்தைகள்.

20. பரிக்ரம ப்ரேக்ஷித பாஷிதாத்யை:

அந்யாத்ருசை: ஆப்தவிபாவநீயை:

மதோபபந்நா மதலாலஸா வா

ஜிதச்ரமாவேதி ஜநை: சசங்கே


சுற்றிச் சுற்றி வருதல், கூர்ந்து கூர்ந்து பார்த்தல், கச்சிதமாகப் பேசுவது முதலான செயல்கள் விலக்ஷணமாய் இருந்தன. இதைக் கண்ட மற்றவர்கள் பலவாறு எண்ணத் தொடங்கினர். இவளுக்கு மதம் ஏற்பட்டுவிட்டதோ, அல்லது ச்ரமம் தெரியாமல் இருக்க மத்யபானம் பண்ணியிருப்பாளோ! மதலாலஸையோ! அல்லது ச்ரமத்தை வென்றிருப்பாளோ? (லாலஸா- கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் பெரிய ஆசை உத்சாகம் எனக் கொள்ளலாம்).


21. சேஷே சயாநாம் கருடேந யாந்திம்

பத்மே நிஷண்ணாமதிரத்நபீடம்

ஹயாநநை: ஆச்ரிதவந்தி க்ருத்யாம்

ஸ்வாம் ஆக்ருதிம் ஸ்வப்ந த்ருசா ததர்ச

இதற்கு முன் ஸ்லோகத்தில் தூக்கமே இல்லாமல் சயனித்திருந்தாள். இப்போதோ ஆதிசேஷனில் சயனித்திருப்பதாகவும், கருடனுடன் செல்வதாகவும் ரத்ன சிம்ஹாசனங்களில் தாமரை மலரில் அமர்ந்திருப்பதாகவும் கின்னரர்களால் துதிக்கப்படுவதாகவும் தனது உருவம் இருப்பதாக கனவு கண்டாள். எப்பெருமானைத் தவிர வேறு எவரையும் சுமக்காத கருடன் தன்னைச் சுமப்பதாக தேவகி கனவு கண்டாள். உள்ளே இருக்கும் எம்பெருமானுக்கேயுரிய வாஹந கமநாசன ஸுகத்தை தமக்கே அமைந்துவிட்டதை உணர்ந்தாள்.


22. அந்த ஸ்திதம் யஸ்ய விபோ: அசேஷம்

ஜகந்நிவாஸம் தததீ தமந்த:

ததாத்மநோ விச்வம் அபச்யதந்த:

தர்காதிகம் தாத்ருசம் அத்புதம் ந:








எந்த எம்பெருமானின் உள்ளே அசேஷமான உலகமும் அமைந்துள்ளதோ அததகையவனை தன்னுள்ளே தரிக்கின்றாள் தேவகி. அந்த க்ருஷ்ணனின் வயிற்றில் இருக்கும் ப்ரபஞ்சத்தை தன்னுடைய வயிற்றில் கண்டாள். இது எப்படி பொருந்தும்? இது நமது தர்க்கத்திற்கும் விஞ்சிவிட்ட அத்புதம் என்று தான் சொல்லவேண்டும்.


23. ஸுராஸுராதீச்வர மௌளிகாதாத்

விசீர்ண ஜாம்பூநத வேத்ர ச்ருங்கம்

ஆலக்ஷ்ய ஸந்தோஷம் அலக்ஷ்யமந்யை:

அநீகநேதாரம் அவைக்ஷதாராத்.

விஷ்வக்ஸேநர் தன் அருகில் இருப்பதைக் கண்டாள். அவரும் எம்பெருமானை ஸேவிக்க திரண்டுவந்து மேலே விழும் தன்மையுடைய தேவர்களின் தலைவர்களையும், அஸுரர்களின் தலைவர்களையும் நெரிசலைத் தவிர்ப்பதற்காக பிரம்பினால் கிரீடங்களில் அடிப்பார். அவ்வாறு அடிப்பதாலேயே அவர் கையில் இருந்த பிரம்பின் பொன்நுனி சிதறி இருக்கிறது. அடிபட்டவர்கள் அழவில்லை. அழியவில்லை. ஆனால் எங்கும் சந்தோஷம் தான் தென்படுகிறது. இவரை பிறரால் காணமுடியாது. இவர்தானே ஸேநாபதி. இத்தகைய விஷ்வக்சேனரை தன் அருகில் கண்டாள்.


24. த்ரிலோக மாங்கல்ய நிதேஸ் த்ரிவேத்யா:


ஸஞ்சீவநீம் வாசம் உதீரயந்தி


நியோக யோக்யாந் அநக ப்ரஸாதா


நாகௌகஸாம் நாமபி: ஆஜுஹாவ


மூன்று உலகங்களுக்கும் உயிர்ப்பிக்கவல்ல மூன்று வேதங்களுக்கும் நிதிபோல் அமைந்ததான வகையில் பேசுகின்றாள் தேவகி. அங்கு தனது பரிஜனங்களை அனுக்ரஹிப்பவளாய் தேவலோக வாஸிகளின் பெயர்களைக் கொண்டே அழைக்கலானாள். இவர்கள் பெயர் மறந்துவிட்டதா? இவர்களை பெருமையுடன் அழைக்கிறாளா! செல்லமாய் அழைக்கிறாளா? குழப்பத்தினால் அழைக்கிறாளா? அல்லது தனது பரிஜனங்களுக்கு அந்த அந்த அந்தஸ்தை அளிக்க அழைக்கின்றாளோ என்ற கேள்விகள் எழுகின்றன.


25.யத்ருச்சயா யாதவ தர்மபத்நீ


யாமாஹ தர்மேஷூ பராவரேஷு


அத்ருஷ்ட பூர்வாபரயாபி வாசா


ப்ரதிச்ருதா நூநம் அபாவி தஸ்யா:


முன் ஸ்லோகத்தில் வேதங்களையும் இவளுடைய வார்த்தை உயிர் பெறச் செய்கின்றது என்றார்.இதில் இவள் வார்த்தைகளை வேதங்கள் ப்ரதித்வனிக்கின்றன என்கிறார். யாதவ தர்மபத்நியான தேவகி தனக்குத் தோன்றியபடி சிறியதும், பெரியதுமான தர்மங்களில் என்னென்ன சொன்னாளோ அதெல்லாம் வேதவாக்கியம் எதிரொலிப்பது போலவே இருந்தது.


26. க்ரியாம் உபாதித்ஸத விச்வகுப்த்யா


க்ருதாபராதேபி க்ருபாம் அகார்ஷீத்


முநீந்த்ரவ்ருத்யா முகரீபவந்தீ


முக்திக்ஷமாம் வக்தும் இயேஷ வித்யாம்


உலகரக்ஷணத்திற்குஏற்றதையே செய்ய நினைத்தாள்.தவறு செய்தவரிடத்தும் க்ருபை பண்ணினாள். வேதாந்த விசாரமுடையவளாய் ஏதோ சொல்பவளாய் முக்திக்கு ஏற்றதான வித்யையை சொல்ல விரும்பினாள். இதற்கு முன் ஸ்லோகங்களில் வேதத்ரய ஸஞ்சீவனமான வாக்கு என்றவர் இதில் உபநிஷத் ரூபமாய் அவள் வாக்கு அமைந்தது என்று கூறுகிறார்.


27. ஸதாம் சதுர்வர்கபல ப்ரஸூதௌ


நாராயணே கர்ப்பகதே நதாங்கீ


அபங்குராம் உந்நதிம் ஆச்ரயந்தீ


ஸர்வஸ்ய ஸாதித்ஸத ஸர்வம் ஏகா


நல்லோர்க்கு நான்குவிதமான புருஷார்த்தங்களையும் நல்குமவனான நாராயணன் கர்ப்பத்தில் நேர்த்தியாய் எழுந்தருளிவிட்டபடியால் நதாங்கியாய் ஸ்தனபாரத்தால் குனிந்து வணங்கின அங்கமுடையவளாய் இருந்தாள். அவள் உடல் வணங்கியதேயன்றி உள்ளத்தில் சிதறாத உயர்வினைப் பெற்றுவிட்டாள். தான் ஒருத்தியே எல்லோருக்கும் எல்லாவற்றையும் அளிக்க விருப்பங்கொண்டாள்.


28. க்ருசோதரீ கார்ச்யம் அதீத்ய காலே


கேநாபி தாம்நா க்ருத வ்ருத்தியோகா


பராம் அபிக்யாம் க்ரமச: ப்ரபேதே


தாராபிநந்த்யா தநுரைந்தவீவ


இயற்கையாகவே மெல்லிய மேனியுடையவள். இடையும் அப்படியே. கர்ப்பம் வளர வளர மெல்லியநிலை மாறிவிட்டது. ஏதோ ஒரு தேஜோ விஷேசத்தினால் நாளுக்கு நாள் வ்ருத்தியாகிக் கொண்டு இருக்கிறது. நாளடைவில் உயர்ந்த அழகினைப் பெற்று பொலிவுடன் விளங்குகின்றாள். இவளது மேனி தாரை கொண்டாடும் சந்திரனின் மேனி போலன்றோ இருக்கின்றது. இங்கு தாரா என்பது கண்ணில் உள்ள தாரை என்று பொருள். எந்த கண் தான் இவளது திருமேனியை பார்த்து மகிழாது. பல நக்ஷத்ரங்கள் இருந்தாலும் ஒரு சந்திரபிம்ப சோபை ஏற்படுமோ! நக்ஷத்திரங்களால் கொண்டாடப்பெற்றது எனவும் சொல்லலாம். அவனாலும் அபிநந்தனம் பண்ணப்படும் மேனிப்பொலிவு எனவும் சொல்லலாம்.


29. நிகூடம் அந்தர்தததா நிவிஷ்டம்


பத்மாபரிஷ்காரமணிம் ப்ரபூதம்


மத்யேந தஸ்யா: ப்ரசிதேந காலே


மஞ்ஜூஷயா ரூப்யபுவா பபூவே


ள்ளே மறைந்ததாய் இருப்பதும் உன்னதமானதும் லக்ஷ்மிக்கு அணிகலனான ரத்னம் போன்று இருப்பதுமான பெருமானை தரிக்கின்றது தேவகியின் இடை. அதுவும் காலத்தோடு புஷ்டமாய் வளர்ந்துள்ளது. அவ்விடை வெள்ளிப்பேழையோ என்னலாம்படி அமைந்துள்ளது. எம்பெருமானை மணியாக நிரூபணம் பண்ணுவது ஸர்வஸம்மதம். பொன்னை மாமணியை என்றும், சிந்தாமணியே திருவேங்கடம் மேய எந்தாய என்பதும், பச்சை மாமலை போல் மேனி என்பதும் மாணிக்கமே என் மணியே என்றும் கருமாணிக்கமே என்றும் பலவிதமாக ஆழ்வார்கள் அனுபவித்துள்ளனர். மஞ்சூஷிகா மரகதம் பரிசிந்வதாம் த்வாம் என்கிறார் வரதராஜ பஞ்சாசத்தில். வரைமேல் மரகதமே என்கிறார். இங்கு தேவகியின் இடையை உபநிஷத் சாம்யத்தினைப் பெறுகிறது. ஸாலக்ராமங்களை வெள்ளி கோயிலாழ்வாரில் எழுந்தருளப் பண்ணுவது போல் அவளின் இடையில் (ரூப்யம்- வெள்ளி-அழகு)பெருமான் எழுந்தருளப் பண்ணுகிறார்.


30. ஸநை: ஸநைஸ்தாம் உபசீயமாநாம்


தர்சாந்த தீப்தாமிவ சந்த்ரலேகாம்


அந்தஸ்த்த க்ருஷ்ணாம் அவலோகயந்த:


சக்ருஸ் சகோராயிதம் ஆத்மநேத்ரை:


அமாவாஸ்யை கழிந்தபிறகு சந்திரனின் கலை ஒளி பெற்று மெள்ள மெள்ள வளர்ச்சியடையும். வளர வளர சந்திரனின் கலைகளில் கறுப்பு நிறம் தெரியும். அம்மாதிரி வளர்ச்சியடைந்துவரும் தேவகியை சகோர பக்ஷிகள் போல் தங்கள் கண்களால் கண்டனர்.க்ருஷ்ணாம் என்பது சந்திரனின் காணப்படும் கறுப்பு நிறம். க்ருஷ்ணம்ருகம் என்றும் கூறுவர். உள்ளே இருப்பவன் கண்ணன். இந்த ரஹஸ்யத்தை தெரிந்து கொண்டனர் போலும். சந்திரனின் கிரணத்தினை நுகர்வது போல் தேவர்கள் க்ருஷ்ணாம்ருதத்தை உண்டனர்


31. மயி ஸ்திதே விச்வகுரௌ மஹீயாந்


மாபூத் புவோ பார இதீவ மத்வா


ஸகீஜநாநாம் அவலம்ப்ய ஹஸ்தாந்


ஸஞ்சாரலீலாம் சநகைஸ் சகார


அவன் பெருமான், விஸ்வகுரு என்னிடம் வஸிக்கிறான். அவன் அவனையும் என்னையும் தாங்கவேண்டுமானால் பூமிக்கு எவ்வளவு பாரம் அதிகமாகும் என்று எண்ணுவாள் போல் தோழிகளின் கைகளைப் பிடித்துக் கொண்டு மெல்ல சஞ்சாரம் செய்தாள். இதுவும் ஒரு லீலையன்றோ!


32. முகுந்த கர்ப்பா முகுரேஷு தேவீ


நாபச்யத் ஆத்மாநம் அவாப்தபூஷா


நாதத்விஷா நந்தக தர்பணேந


அதித்ருக்ஷதாத்மாநம் அத்ருச்யம் அந்யை: முகுந்தனை கர்ப்பத்தில் கொண்டுள்ள தேவகி நன்கு ஆபரணங்களால் அலங்கரிக்கப் பெற்று தன்னை கண்ணாடிகளில் காணவில்லை. பெண்டிர் தம்மை நன்கு அலங்கரித்து அதுவும் இது போன்ற கர்ப்ப நிலையில் ஆபரணம் பூண்ட பெண்டிர் தங்களைக் கண்ணாடியில் பார்ப்பது இயல்பு. ஆனால் அவளோ முகுந்தனையே தன் ஆபரணமாக தரித்துள்ளவள். அவள் பல ஆபரணங்கள் அணிந்திருந்தும் அதை பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் முகுந்தனை தரித்துள்ளதால் அவள் தன்னைப் பார்க்க விரும்பினாள்.ஆகவே நாதனின் ஒளியான அவனுடைய வாள் என்ற கண்ணாடியின் மூலமாக தன்னைக் காண விரும்பினாள். நந்தகம் நாம ஹரே: ப்ரதீப்தம் கட்கம் என்பர். ப்ரதீப்தம் என்றால் அது கண்ணாடி போல் பளபளக்கும். கண்ணனையே ஒளியாகக் கொண்ட நந்தகத்தில் பார்த்தால் கண்ணனையும் பார்க்கலாம் என எண்ணினாள் போலும்.


33. ஸ்ரஜ: ப்ரபூதா ந ச(ஷ)ஷாக வோடும்


தூரே கதா ரத்நவிபூஷணாநாம்


பவிஷ்யதி க்ஷோணி பராபநோதே


ப்ரத்யாயநம் ப்ராதமிகம் ததாஸீத்


முதல் ஸ்லோகத்தில் ஆபரணங்களை அணியவில்லை என்றார். இதில் ஆபரணங்களைக் காட்டிலும் மெல்லியதான மாலைகளை கூட அணிய இயலாதவளாக ஆகிவிட்டாள். பண்டைய நாட்களில் மாலைகளை அணிந்து சஞ்சரிப்பது வழக்கம். கர்ப்பபாரம் தவிர்க்க முடியாது. மாலைகளின் பாரம் வேறு வேண்டுமா? இது எவ்வாறு இருக்கின்றது எனில் பிறக்கப்போகும் மகனால் பூமியின் பாரம் குறையப் போகிறது. அதை முன்கூட்டியே உறுதிப் படுத்தும் அடையாளமாக இருந்தது என்பதாம்.


34 திவௌகஸோ தேவக வம்சலக்ஷ்மீம்


விலோக்ய தாம் லோகநிதாந கர்ப்பாம்


விபூதிம் அக்ரேஸர வேதவாதா:


வ்யாசக்யுரஸ்யா விவிதப்ரகாராம்


தேவதேவன் கர்ப்பத்தில் எழுந்தருளிவிட்டான். இதை உணர்ந்த தேவர்கள் தேவக வம்சத்தின் லக்ஷ்மியெனத் திகழ்ந்த தேவகியை உலகங்களின் ஆதிகாரணமான வஸ்துவை கர்ப்பத்தில் கொண்டிருப்பதைக் கண்டு வேத வாக்கியங்களை முன்மொழிபவர்களாய பலவகையான இவளுடைய வைபவத்தை துதிக்கலாயினர்.


35. பதி: ஸஸத்வாமபி தத்ப்ரபாவாத்


அதுக்கசீ(sh)லாம் ஸமயே பவித்ரீம்


ஸுகைகதாநாம் அவலோக்ய தேவீம்


ஸ்வஸம்பதம் ஸூசயதீதி மேநே


இதுவரை தேவகியின் கர்ப்பலக்ஷண ப்ரபாவங்கள் கூறப்பட்டன. இதில் பூரண கர்ப்பிணியாய் ப்ரஸவகாலம் நெருங்கும் சமயத்தில் தேவகியின் மநோநிலையும் அப்போது வஸுதேவரின் மனோநிலையும் எப்படி இருந்தன என்று கூறுகிறார். தேவகியின் பதியான வஸுதேவர் பூரண கர்ப்பிணியாயிருந்தும் அந்த கர்ப்பத்தின் ப்ரபாவத்தினால் எந்த விதமான ச்ரமமோ துக்கமோ இல்லாமல் இருந்து ப்ரஸவ சமயத்தில் ஸுகமாக இருப்பாள் என்றும் கண்டு தனது பவித்திரமான செல்வத்தை அது காண்பிப்பதாக உணர்ந்தார்.


36. பித்ருத்வம் ஆஸாத்ய ஸுராஸுராணாம்


பிதாமஹத்வம் ப்ரதிபத்ஸ்யமாத:


அநந்த கர்ப்பாம் அவலோக்ய தேவீம்


அதுஷ்யத் அந்யேஷு கதாபிலாஷ: முன்னம் கச்யபராக இருந்தவர் இப்பொழுது வஸுதேவர். திதி, அதிதி மூலம் அவர்களுக்கு பிறந்தவர்கள் தேவர்களும் அசுரர்களும். பகவான் உபேந்திரனாக அவதரித்ததும் கச்யபருக்குத்தான். வாமனனுக்கோ, த்ரிவிக்ரமனுக்கோ க்ருஹஸ்த தர்மமோ, சந்ததியோ சிந்திக்கப்படுவதில்லை. ஆனால் கண்ணன் விஷயத்தில் முற்றிலும் மாறுபட்டுவிட்டது. முன்பு அவர் தேவர்களுக்கு பிதாவாக இருந்தார். இப்போது பிதாமஹத்வம் பெற்றுவிட்டார். அனந்தனை கர்ப்பத்தில் கொண்ட தனது தேவியை பார்த்து வேறு எதிலும் அபிலாஷை இல்லாதவராய் அகமகிழ்ந்தார் வஸுதேவர்.


37. தாபோபசாந்திம் ஜகதாம் திசந்தீ


ஸந்த்யாபரா ஸாதுஜந ப்ரதீக்ஷ்யாம்


தாம் ஈத்ருஷீம் விச்வபிது: ப்ரஸூதிம்


ஸம்வேதயந்தீவ ஸமாஜகாம


இதுவரை தேவகியின் கர்ப்பலக்ஷணங்களை தெரிவித்தார். இனி சாயங்காலம் தொடக்கமாக நள்ளிரவு வரையிலான வர்ணனங்கள் வரிசையாக இடம் பெறுகின்றன. உலகங்களின் தாபத்திற்கு சாந்தியை அளிப்பதான, ஸாது ஜனங்களால் எதிர்பார்க்கப்படுவதாய் உள்ள மாலைவேளை விச்வபிதாவின் இத்தகைய அவதாரத்தினைக் காண்பிப்பது போல வந்து சேர்ந்தது.


38. ஸுவர்ண பீதாம்பர வாஸிநீ ஸா


ஸ்வதாம ஸஞ்ச்சாதித ஸூர்யதீப்தி:


உபாஸநீயா ஜகதாம் பபாஸே


முரத்விஷோ மூர்த்திரிவ த்விதீயா முந்திய ஸ்லோகத்தில் ஸாயம் ஸ்ந்த்யையின் வருகையை வர்ணித்தார். இதில் ஸ்ந்த்யா என்பவளைப் பெண்ணாகவே அழகான முறையில் வர்ணிக்கிறார். அழகான பீதாம்பரத்தை அணிந்திருக்கிறாள். மனோஹரமான ஸுவர்ணத்தோடு கூடியதான (அந்தி போல் நிறத்தாடை) பட்டுப்புடவை எனக் கொள்ளலாம். ஸந்த்யா ப்ரகாசத்திலே சூரியப்ரகாசம் மறைவது இயற்கை. தனது ப்ரகாசத்தினால் ஸூரியனுடைய ஒளியை மறைப்பவளாய் முரன் என்ற அசுரனைக் கொன்ற பகவானின் இரண்டாவது உருவமோ என்னும் வகையில் அமைந்தவளாய் உலகங்களுக்கு உபாஸிக்க வேண்டியவளாகி விட்டாள். ( இன்னும் பெருமான் அவதரிக்கவில்லை. எப்படி இருப்பான் என தெரியாது) அதனால் ஸந்த்யையே இரண்டாவது ரூபமாக இருந்தாள் என்கிறார்.


39. ப்ரஸக்தபாதஸ் சரமாம்புராசௌ


ரக்தோருபிம்போ ரவி: அஸ்தசைலாத்


திநாந்த நாகேந த்ருடப்ரணுந்நம்


மநஸ்ஸிலா(manashshila) ச்ருங்கமிவாபபாஸே


சூரியன் மாலையில் அஸ்தமன மலையில் இருந்து மேற்கு கடலில் சிவந்த பெரிய உருவத்துடன் விழத்தொடங்கினான். பகலின் முடிவு- மாலை என்றொரு யானையினால் வேகமாக எறியப்பட்ட மநஸ்ஸிலா ச்ருங்கம் போலிருந்தது என்கிறார். ( மநஸ்ஸிலா அல்லது மனshஸிலா - மலையில் ஒரு விதமான தாதுப்பொருள் உண்டு. அது சிவந்த நிறத்தில் இருக்கும். பெரிய பெரிய குன்றுகளாக இருக்கும். மாலையை யானை என வர்ணிக்கிறார். கறுப்பு நிறம். மலைச்சிகரத்தையே வீழ்த்தும் யானை என்று வர்ணிக்கிறார் காளிதாசன். அத்தகையதைப் போன்ற மாலையானது ப்ரகாசத்தின் அதிபதியான சூரியனை திடமாக எழுந்திருக்க முடியாமல் தள்ளியது என்கிறார். ஆஹா! ஆஹா!


40. நிமஜ்ஜதா வாரிநிதௌ ஸவித்ரா


கோ நாம ஜாயேத கரக்ரஹீதா


ததேதி ஸம்பாவநயைவ நூநம்


தூராத் உதக்ஷேபி கராக்ரம் உச்சை:


பெருங்கடலில் சூரியன் மூழ்கிக் கொண்டிருக்கிறான். ஆனாலும் ஆகாயத்தில்அவனுடைய கிரணங்கள் தெரிவிக்கப்பட்டன.தனக்கு யாராவது கை கொடுத்து தூக்கிவிடமாட்டார்களா என்று எண்ணி தனது கைகளை வெகுதூரம் வரை மேல் நீட்டுகிறான் போலும்.


41. ஸ்ப்புரத் ப்ரபா கேஸரம் அர்கபிம்பம்


மமஜ்ஜ ஸிந்தௌ மகரந்ததாம்ரம்


ஸந்த்யாகுமார்யா ககநாம்புராசே:


க்ரீடாஹ்ருதம் க்ஷிப்தமிவாரவிந்தம்


கேஸரங்கள் பூவின் தாதுக்கள். அவைபோல் விளங்குகின்ற ஒளியுடைய சூரியபிம்பம். அது தாமரைமலர் போல் சிவந்த நிறமுடையது. அது கடலில் மூழ்கிவிட்டது. ஸந்த்யை என்ற சிறுமி ஆகாயம் என்ற கடலிலிருந்து விளையாட்டாகப் பறித்து எறிந்துவிட்ட தாமரைப்பூப்போலே ஆயிற்று. இது ஒரு அத்புதமான ஸ்லோகம்.ஸந்த்யா காலத்தினைக் குமாரியாகவும், சூரியனைத் தாமரைப்பூவாகவும் ஆகாயத்தைக் கடலாகவும் நிரூபணம் செய்வது ஸ்வாமியின் தனிப்பாங்கு. சூரியன் மறைந்தால் தாமரைப்பூ மூடிக் கொள்ளும்.சூரியனே தாமரைப்பூவானால் மூழ்குவது என்ற நிலையாம். முந்தைய ஸ்லோகத்தில் மூழ்கிக்கொண்டிருக்கிற என்றும் இதில் மூழ்கிவிட்டது என்றும் தெரிவித்ததை கவனிக்க வேண்டும்.


42. பணாமணிப்ரேக்ஷ்ய கராம்சுபிம்ப:


ஸந்த்யா ஸுபர்ணிம் அவலோக்ய பீத:


தாபாதிகோ வாஸரபந்நகேந்த்ர:


ப்ராயேண பாதாள பிலம் விவேச


பகல் என்கிற பெரியதொரு பாம்பு தாபம் அதிகமாகி தனது தலையில் உள்ள மணியினால் கதிரவனோ என பயந்து ஸந்த்யை என்ற கருடபக்ஷியின் தாயைக் கண்டு நடுங்கி பாதாளம் என்ற பொந்தில் புகுந்துவிட்டது போல் ஆயிற்று. ஸந்த்யா காலத்தை ஸுபர்ணீம் என்கிறார். ஆகவே பெண்பாலாக வர்ணித்துவிட்டமையால் கருடனுடைய தாய் என்கிறார். சூரியன் மூழ்கும்போது அவனுடைய உருவம் தலைபோல் இருக்கும். உடனே இருட்டிவிடும். இதை அழகாக விவரிக்கிறார் ஸ்வாமி. அதிகமான தாபத்தை உடையது பகல். அதை போக்கவேண்டுமே. விஷத்தை அதிகமாக பெற்றிருப்பதால் கொதிப்பு அதிகம் உடையது பாம்பு. (வாஸரம் - பகல்). வாஸர என்பது பாம்பின் வகை. (பந்நகம், வாஸர போன்ற பாம்புகள் ஜனமேஜயனின் யாகத்தில் வந்து விழுந்ததாக பாரதம் குறிப்பிடுகிறது. ஆகவே தாபத்தை தணித்துக் கொள்ள பாதாளத்தில் ஒளிந்துவிட்டதாக கூறுகிறார்.


43. ப்ரதோஷராகாருண ஸூர்யலோகாத்


திசாகஜோ த்ருப்த இவாதிகோர:


காலோபநீதம் மதுநா ஸமேதம்


அபுங்க்த மந்யே கபலம் பயோதி:









மாலை வேளை-சிவந்த நிறம். அப்பொழுது கதிரவன் கடலில் மூழ்கி மறைகின்றான். இதை வர்ணிக்கிறார். கடல் என்கிற ஒரு பெரிய மதம் தோய்ந்த திக்கஜமொன்று காலம் கொடுத்த தேனில் தோய்ந்த கவளம் போலே சூரியனை விழுங்கிவிட்டது என்று நினைக்கிறேன். ஒவ்வொரு படியாக மாலை வேளையை வர்ணிக்கிறார். கதிரவன் கடலில் மூழ்கும் நிலையை வர்ணிக்கிறார். அதிகோரமானதும் மதம் பிடித்ததுமான திக்கஜம் என்கிறார். மாலையானதால் மேற்குத் திக்கில் இருக்கும் யானைக்கு அஞ்சனம் என்று பெயர். (கிழக்கில் ஐராவதம்). அஞ்சனம் கறுப்பு நிறம். உருவத்தாலும் செயலாலும் கொடூரமானது. மேலும் காலோபநீதம் மதுநா என்கிறார். மது சிகப்பாயிருக்கும். சூரியனும் சிவப்பு. திக்கோ வாருணீ. யானையோ அஞ்சனம். ஆகவே கடல் கபலத்தை விழுங்கிவிட்டது என்று பொருளாகும்.


44. ததா தம: ப்ரோஷித சந்த்ரஸூர்யே


தோஷாமுகே தூஷித ஸர்வ நேத்ரம்


வியோகிநாம் சோகமயஸ்ய வந்ஹே:


ஆசாகதோ தூம இவாந்வபாவி


அந்த சமயத்தில் சூரியனும் இல்லை. சந்திரனும் இல்லை. இரவு தொடங்குகிறது. தோஷாமுகம் என்பது இரவின் தொடக்கம். எல்லோருடைய கண்களையும் மறைப்பது தோஷாமுகத்தின் ப்ரபாவம். வஸ்துக்களும் உள்ளன. கண்களும் உள்ளன. ஆனால் அக்கண்களால் வஸ்துக்களைக் காண இயலவில்லை. இருள் சூழ்ந்து கொண்டது. தம்பதிகள் அல்லது காதலர்கள் காலவசத்தால் பிரிந்து இருக்கின்றனர். அவர்களுடைய சோகம் பெருகி பாதிக்கிறது. சோகம் பெருகி நெருப்பு போல் எரிகிறது. வெளியில் ஜ்வாலை படராத நெருப்பு என கவி வர்ணிக்கிறார். வெளியில் தெரிந்தால் தணிக்கலாம். ஆனால் அது வெளிக் கிளம்புமா? உள்ளேயே புகைக்க ஆரம்பித்துவிட்டது. புகையே இருள். இரவு தொடக்கமாதலால் இரண்டு எதிர் திக்குகளில் கிளம்பின சோகப்புகையே எங்கும் பரவிவிட்டதோ என்னலாம்படியுள்ளது.


45. ஸதாரபுஷ்பா த்ருதபல்லவஸ்ரீ:


ப்ரச்சாய நீரந்த்ரதம: ப்ரதாநா


விச்வாபிநந்த்யா வவ்ருதே ததாநீம்


வைஹாயஸீ காபி வஸந்த வந்யா




முன் ஸ்லோகத்தில் இருள் பரவியதைக் கூறினார். இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக நக்ஷத்திரங்கள் தோன்றுவது முதலான அழகினை வர்ணிக்கிறார். ஸந்த்யையின் ஒளியினால் சிவப்பு நிறமும் கறுத்தும் இருக்கும் தளிரின் ஒளி போன்ற ஆகாயம். அது ஒரு வனம் போல விலக்ஷணமான வசந்தவன சோபையுடன் திகழ்கிறது. அதில் நக்ஷத்திரங்கள் பூக்கள் போல திகழ்கிறது. வனத்தின் சோபையை வானத்திலிருந்துதான் பார்க்க இயலும். ஆனால் வானத்தின் வனசோபையை இங்கிருந்தே நாம் அனுபவிக்கலாம்.


46. அலக்ஷ்யத ச்யாமலம் அந்தரிக்ஷம்


தாராபிர் ஆதர்சித மௌக்திகௌகம்


நிவத்ஸ்யதோ விச்வபதேர் அவந்யாம்


காலேந ப்ருத்யேந க்ருதம் விதாநம்


வானம் கறுத்து காணப்பெற்றது.கறுநிறமுள்ள ஆகாயம் விதானமாக காட்சியளித்தது.அங்கு முத்துக்களைக் குவித்தது போல் நக்ஷத்திரங்கள் காட்சியளிக்கின்றன.விதானத்தில் மேற்பரப்பில் அழகான முத்துக்களை அமைப்பது உண்டு.இங்கு காலம் என்ற பணியாள் வானத்தையே விதானமாக்கி முத்துப்பந்தல் அமைக்கிறது! ப்ரபு வருவதற்கு முன்னம்தான் பந்தல் போடுவது,விதானம் கட்டுவது வழக்கம். இங்கு பூமியில் வாசம் செய்ய விச்வபதி வருகிறான். பூமியில் வசிக்கப் போவதால் வானமே விதாநம் ஆயிற்று.


47. அப்ருங்கநாத ப்ரதிபந்ந மௌநா


நிமேஷபாஜோ நியதம் வநஸ்த்தா:


தூரம் கதே ஸ்வாமிநி புஷ்கரிண்ய:


தத்ப்ராப்தி லாபாய தபோ விதேநு:


சூரியன் மறைந்ததும் இயற்கையாகவே தாமரை மலர்கள் வாய் கூம்பும். மலர்கள் மூடிவிட்டதால் வண்டுகள் முரலாமல் அடங்கிவிட்டன. இனி நாதம் இல்லை. மௌனம் முனிவரின் செயல். தவம் புரிவோர் கண்களை மூடிக் கொண்டு இருப்பர்.அசைவில்லாமல் இருப்பர்.சிலர் நீரில் நின்றும் அசைவற்று இருப்பர்.அதே போல் தனது கணவனான சூரியன் வெகுதூரம் சென்றுவிட்டபடியால் தாமரையானது தவக்கோலத்தில் இருக்கிறதாம். தாமரைக்கும் சூரியனுக்கும் பதி-பத்னி பாவம். ஸ்வாமி எங்கோ சென்றுவிட்டார். அவரை அடைய கடுந்தவம் புரிந்துதான் ஆகவேண்டும். (சுத்தமான தீர்த்தத்தை புஷ்கரிணி என்பார்கள். தூயமையும் தவமும் கொண்ட படியால் தாமரை ஓடைகளை ஸ்வாமி புஷ்கரிணி என்பார்கள். )


48. நிமீலிதாநாம் கமலோத்பலாநாம்


நிஷ்பந்த ஸக்யைரிவ சக்ரவாகை:


விமுக்த போகைர் விததே விஷண்ணை:


விபோத வேலாவதிகோ விலாப:


தாமரை மலர்களும் கருநெய்தல்களும் கண்களை மூடிக்கொண்டுவிட்டன. இரவில் கருநெய்தல் மலரத்தானே வேண்டும். ஆனாலும் மலரவில்லை. இதைக்கண்டு சக்ரவாக பக்ஷிகள் தமக்குள்ளே பிரிந்து அழுகின்றன.இரவில் சக்ரவாகம் பிரிந்தே இருக்கும். விடியும்வரை அவை வாய்விட்டு அழுதவண்ணம் இருக்கும். இதன் காரணம் வேறாயிருந்தும் ஸ்வாமி அழகான கவிமரபால் விளக்குகிறார். தாமரை மலரும் கருநெய்தல் மலரும் பதியைப் பிரிந்த துக்கத்தில் கண்மூடிக்கிடக்கின்றனவே,தாம் மட்டும் போகத்தை அனுபவிக்கலாகது என்றெண்ணி அவை உயிர் பெற்று எழவேண்டும் என்று வாய் ஓயாமல் கூவுகின்றன போலும்.


49. தமிஸ்ர நீலாம்பர ஸம்வ்ருதாங்கீ


ச்யாமா பபௌ கிஞ்சித் அதீத்ய ஸந்த்யாம்


ப்ராசீநசைலே ஸமயாந் நிகூடம்


ஸமுத்யதா சந்த்ர மிவாபிஸர்தும்








இருளாகிற கறுப்பு சேலை அணிந்து அதனால் தன்னைப் போர்த்திக் கொண்டு ச்யாமா(நல்ல வயதுடைய பருவப் பெண்) ஸந்த்யா காலம் கழிந்ததும் தன் ஆசைநாயகன் கிழக்குமலையில் ஒளிந்திருக்க அவனிடம் காதல் கொண்டு குறிப்பிட்ட சமயத்தில் குறிப்பிட்ட இடத்துக்குச் செல்லும் அபிஸாரிகையை போல் சந்திரனை அணுக முயற்சி செய்தாள். (கிழக்கு மலையில் ஒளிந்திருப்பவன் சந்திரன். அஷ்டமியாதலால் குறிப்பிட்ட காலத்திற்கு பின்னேதான் தோன்றுவான்.)


50 . நிசாகரேண ப்ரதிபந்நஸத்வா


நிக்ஷிப்ததேஹேவ பயோதிதல்பே .


ஜகத் ஸமீக்ஷ்யா ஜஹதீச கார்ச்யம்


ப்ராசீ திசா பாண்டரதாம் அயாசீத்


சந்திரனோடு சேர்ந்துவிட்டாள் ஒரு பெண். பும்யோகம் ஏற்பட்டால் கர்ப்பம் தரிக்க நேரமாகுமோ!கடலெனும் படுக்கையில் கிடக்கிறாள் போலே இருக்கிறாள்.சந்த்ரோதயம்ஆகப் போகிறது.அதனால் தனது க்ருசத்தன்மையை விட்டுவிட்டு உலகமெலாம் காணத்தகுந்தவளாய் ஆகப் போகிறாள். எவ்வளவு உடல் வெளுத்துவிட்டது. அது வேறு யாரும் இல்லையாம். கிழக்கு திக்கு என்பதேயாம்.


51. தம:ப்ரஸங்கேந விமுச்யமாநா


கௌரப்ரபா கோத்ரபிதாபி நந்தயா


விதூதயாரம்ப விசேஷத்ருச்யா


ப்ராசீ திசா பாஸத தேவகீவ


ஸ்லோகத்தில் கிழக்கு திக்கு கர்ப்பவதியாயிற்று என்றார். இதில் மேலும் கிழக்கு திக்கு அடைந்த பெருமைகளைக் குறிக்கிறார். கோத்ரம் என்றால் மலை என்றும் வம்சம் என்றும் பொருள். மலைகளை பிளந்தவன் இந்திரன். அவனது திசை கிழக்கு. க்ருஷ்ணபக்ஷ அஷ்டமியில் அர்த்தராத்திரியில்தான் சந்திரன் உதயமாகும் அப்பொழுது இருள் அகன்று கிழக்கு தனி ஒளியைப் பெறுவது இயற்கை. சந்திரன் உதிக்க ஆரம்பித்ததால் கிழக்கு வெளுத்த ஒளி உடையதாய் , அதற்கு அதிபதியான இந்திரனால் கொண்டாடப்படுவதாய் உள்ள கிழக்கானது தேவகி போல் விளங்கியது. இந்த ஸ்லோகத்தில் கூறப்படும் ஒவ்வொரு விசேஷணமும் இரண்டு அர்த்தங்கள் கொண்டது. தேவகியைப் போலே கிழக்கு திக்கு ஒளிமிக்கதாயிருந்தது. எம்பெருமான் கர்பத்தில் எழுந்தருளிவிட்டபடியால் தமோகுணத்தின் பலிதமான சோகமோ பயமோ இல்லாமல் இருந்தாள் தேவகி. கோத்ரபிதா என்பதற்கு கண்ணனால் என்று பொருள். (ஒருத்தி மகனாய் பிறந்து ஒருத்தி மகனாய் வாழ்ந்ததால் கோத்ரத்தை பேதித்து வாழ்பவன்). விது என்றால் ஹ்ருஷிகேசனையும் விதூதயம் சந்திரனையும் குறிக்கும். விதூதயம் என்பதற்கு சமீபத்தில் அவதரிக்கப் போவதால் மிகுந்த அழகுடையவளாய் இருந்தாள் எனவும் கொள்ளலாம். ஆகவே தேவகி கிழக்குதிக்கு போல் இருந்தாள் எனக் கூறாமல் கிழக்கு தேவகீ போல் இருந்தது என்கிறார்.


52. அபத்யலாபம் யது வீரபத்ந்யா:


மஹோததௌ மக்ந ஸமுத்திதேந


தத்வம்சமாந்யேந ஸமீக்ஷ்ய பூர்வம்


ப்ராப்தம் ப்ரதீதேந புரோதஸேவ


யதுவின் வம்சத்தில் மிகவும் சிரேஷ்டராய் விளங்கும் வஸுதேவரின் பத்நியான தேவகிக்கு புத்திரன் பிறக்கப் போகிறான் என்பதை அறிந்து கொண்டு கடலில் நீராடிவிட்டு வெளியே வரும் சந்திரன் முன்னமே விஷயம் தெரிந்து வரும் புரோஹிதன் போல் வந்து விட்டான். யதுவம்சம் சந்திர வம்சம்தானே. அதில் கௌரவத்துடன் விளங்குவதால் அவனே வருவது பெருமை எனப்பட்டது.


53. க்ஷ்வேலோபமே ஸந்தமஸே நிரஸ்தே


ஸோமம் ஸுதாஸ்தோம மிவோத்வமந்தீ


துக்தோத வேலேவ துதோஹ லக்ஷ்மீம்


ஆசா மநோக்ஞாம் அமரேந்த்ரமாந்யா


விஷம் போன்றதொரு காரிருள் நீங்கிவிட்டது. சந்திரன் தோன்றிவிட்டான். இது அமுதப்பெருக்கு என்னலாம்படி உள்ளது. க்ஷீரஸமுத்திரத்தின் கரை போன்ற அழகான கிழக்குதிக்கு அழகான சோபையை பொழிகிறது. ஒருக்கால் கிழக்கு சந்திரனை உமிழ்ந்து விட்டதோ என நினைக்கத் தோன்றுகிறது.


54. தமஸ் ஸமாக்ராந்திவசேந பூர்வம்


ஜக்ஞே நிமக்நைரிவ பூததாத்ர்யம்


ததஸ் துஷாராம்சுகராவகூடை:


உத்தப்யமாநைரிவ சைலச்ருங்கை:


முன்னம் இருள் பரவியதன் காரணமாக பூமியில் மலைகளின் சிகரங்கள் மூழ்கிவிட்டது போல் இருந்தன. பிறகு சந்திரனின் கிரணங்கள் படிந்தபொழுது மறுபடியும் அவை வெளிக் கிளம்புவன போல் ஆயின.



55. திசஸ் ததாநீம் அவநீதராணாம்


ஸகைரிகை: பாரதபங்கலேபை:


சகாசிரே சந்த்ரமஸோ மயூகை:


பஞ்சாயுதஸ்யேவ சரை: ப்ரதீப்தை:


அப்பொழுது திக்குகள் எல்லாம் மிகவும் பொலிந்து விளங்கின.காரணம் சந்திரனின் கிரணங்கள் மலைகளின் சிகரங்களில் படிகின்றன.கைரிகம் என்பது தாதுப்பொருள். கைரிகம் என்பது தங்கத்தையும் குறிக்கும். பாரதம் என்பது பாதரஸத்தைக் குறிக்கும். பாதரஸத்தில் கலந்து தங்கம் பூசப்பட்டது போல கிரணங்களினால் சிகரங்கள் விளங்கின. அப்போது அவை மன்மதனின் பாணங்கள் போல் ஜொலித்தன.திக்குகளாகிற பெண்கள் சந்திர கிரணங்களாகிற பூக்களை சூட்டி மகிழ்வது போலும், சந்திர கிரணங்கள் மன்மத சரங்களைப்போலவும் தோற்றமளித்தன.


56. ஸமுந்நமந்தீ குடிலாயதாத்மா


சசாங்க லேகோதய த்ருச்யகோடி:


வியோகிசேதோலவநே ப்ரவீணா


காமோத்யதா காஞ்சந சங்குலேவ


சந்திரனின் ரேகை, உதயமாகும்போது அழகான நுனி தோன்றுகின்றது. வளைந்தும் நீண்டும் வெளிக் கிளம்புகின்றதாய், சந்திரன் கோடு தோன்றும்போது தோன்றும் அழகான நுனி, பிரிந்த காதலர்களின் மனதை அறுப்பதில் கை தேர்ந்தவனான காமனால் ஏந்தப்பட்ட தங்க அரிவாள் போல் இருந்தது.


57. தமாம்ஸி துர்வாரபலஸ் ஸ கால:


ப்ராயோ விலோப்தும் ஸஹஸா திசாம் ச


மநாம்ஸி காமஸ்ச மநஸ்விநீநாம்


ப்ராயுங்க்த சைத்யாதிகம் அர்த்தசந்த்ரம்


காலத்தின் பலத்தை எவ்வாறு அறிய இயலும். அதன் பலத்தை தடுத்து நிறுத்த யாராலும் இயலாது. அது விரைகிறது. திக்குகள் வரை படர்ந்துள்ள இருட்களை முழுதுமாக போக்கிட முனைந்துவிட்டது. அதுமட்டுமல்ல. காலத்தைப் போலவே காமனும் பலசாலி. தைரியசாலிகளான ஸ்தீரிகளின் உள்ளங்களை அடக்குவதற்கும் முனைந்துவிட்டான். இருவரும் செய்வது என்ன? அர்த்த சந்திர ப்ரயோகம்தான். தோன்றியது அஷ்டமிசந்திரன். அர்த்த சந்திரனானபடியால் வர்ணனம்.


58. கரேண ஸங்கோசிதபுஷ்கரேண


மதப்ரதிச் சந்த கலங்கபூமா


க்ஷிப்த்வா தமஸ்(sh) சைவலம் உந்மமஜ்ஜ


மக்நோ திசாநாக இவேந்துரப்தே:


சந்திரன் கடலிலிருந்து தோன்றுகிறான். அவன் திக்நாகம் போல் இருக்கிறான். திக்கஜம் கடலில் மூழ்கி வெளிவருவது போல் உள்ளது. இருள் கடலில் படர்ந்த பாசி போல் உள்ளது. அவற்றை விலக்கிக் கொண்டு வருவது போல் சந்திரனுக்கும் யானைக்கும் அவ்வளவு பொருத்தம். சந்திரன் தனது கையினால்(வருகை) தாமரை மலரை மூடச் செய்கிறான். யானையும் தனது தும்பிக்கையை மடக்கி கிளம்பும். யானைக்கு மதஜலம் பெருகும். சந்திரனின் களங்கம் மதஜலம் போல் தோன்றும்.


59. மதோதயா தாம்ர கபோலபாஸா

சக்ரஸ்ய காஷ்ட்டா சசிநா சகாஸே

உதேயுஷா வ்யஞ்ஜயிதும் த்ரிலோகீம்

நாதஸ்ய ஸா நாபிரிவாம்புஜேந

இந்திரனுடைய திக்கான கிழக்கு மூன்று உலகங்களையும் விளங்கச் செய்யத் தோன்றிய சந்திரனால் மிகவும் ப்ரகாசித்தது. மேலும், தோன்றும்போது கொஞ்சம் சிவப்பு நிறம் கலந்திருக்கும். ஆஸவம் போன்ற மதுவின் சேர்க்கையினால் கொஞ்சம் சிவந்து ஒளிபெற்ற கன்னமுடையவனாகத் தோன்றினான். அவனால் கிழக்கு விளங்கியது. இது எப்படி இருக்கிறது என்று வர்ணிக்கிறார். பத்மநாபனுடைய நாபியானது தாமரைப்பூவால் எத்தகைய சோபை அடையுமோ அத்தகையது என்பதாம். நாபிகமலமானது ப்ரம்மனைத் தோற்றுவித்து அவன் வாயிலாக மூன்று உலகங்களையும் தோற்றுவிக்குமோ அத்தகைய தாமரை போல சந்திரன் விளங்கினான்.


60. ஸமீபத: ஸந்தமஸாம்பு ராசே


பபார சங்காக்ருதிரிந்துபிம்ப:


பித்தோபராகாதிவ பீதிமாநம்


தோஷாவில ப்ரோஷித த்ருஷ்டிதத்தாத்


இருள் என்ற பெருங்கடலில் சங்க வடிவில் உள்ள சந்திரபிம்பம் மஞ்சள் நிறத்தை ஏந்தி நின்றதாம். இந்த மஞ்சள் நிறம் பித்த சம்பந்தத்தினால் ஏற்படுவதாம். பிரிந்து வாழும் காதலர்கள் கண்கள் விழித்து அதனால் கண்களில் தோஷங்கள் ஏற்பட அதன் காரணமாக பித்த சம்பந்தம் அதிகமாக சந்திரபிம்பமும் மஞ்சள் நிறமாகத் தோன்றுகிறது.


61. க்ருசோதரீ லோசந க்ருஷ்ணலக்ஷ்மா

ராத்ர்யாஸ் ஸமித்தோதயராக இந்து:

கஸ்தூரிகா குங்கும சித்ரிதாத்மா


கர்ப்பூர விந்யாஸ இவாந்வபாவி


மெல்லிய இடையுடைய மங்கைகளின் கண்கள் போல் கறுத்து இருப்பதையே அடையாளமாகக் கொண்டவனும் உதய காலத்தில் ஒரு விதமான சிவப்பு நிறமுடையவனுமான சந்திரன், கஸ்தூரியும் குங்குமமும் இழைத்து ராத்திரி என்கிற் பெண்ணுக்கு இடப்பட்ட கர்ப்பூரதிலகம் போல காட்சியளித்தான். ஸாமுத்ரிகா லக்ஷணத்தில் க்ருசோதரீ என்று வர்ணிக்கப்படும் பெண்களின் கண்கள் கறுத்து இருக்கும். அதேபோல் சந்திரனின் களங்கம் தெளிவாகத் தெரிவதாம். க்ருஷ்ணதாரை என்றும் கூறுவர். தனது வம்சத்தின் அடையாளமாக க்ருஷ்ணனையே பெற்ற பெருமை சந்திரனையே சேரும் எனக் கொள்ளலாம். உதய காலத்தில் ஒரு வகையான சிவப்பு நிறமாயிருக்கும். கஸ்தூரி குங்குமம் ஆகிய இரண்டும் சேர்த்து விசித்திரமாக அமைந்தது. சந்திரன் வெளுப்பான கர்ப்பூரமானான். சந்திரனுடைய களங்கம் கஸ்தூரியாயிற்று. இரவு கறுத்த நிறப்பெண்ணான படியால் சந்திரனைத்தான் திலகமாகப் பெற்றாளோ?


62. ப்ரஸாதம் அந்தக்கரணஸ்ய தாதா


ப்ரத்யக்ஷயந் விச்வமிதம் ப்ரகாசை:


தமஸ்ச ராகஞ்ச விதூய சந்த்ர:


ஸம்மோதநம் ஸத்வமிவோல்லலாஸ


முன் ஸ்லோகத்தில் சந்திரன் இரவென்னும் பெண்ணுக்கு திலகமாகத் தோன்றினான். சிவப்பும், கறுப்பும் கலந்த நிலை. இங்கு நல்ல வெளுப்பான நிலையை அழகாக வர்ணிக்கிறார். இருளையும், சிவந்த நிறத்தையும் உதறித் தள்ளிய சந்திரன் ஆனந்தத்தை அளிக்கும் ஸத்வகுணம் போல் விளங்கினான். ஸம்மோதநம் என்பதற்கு ஸத்துக்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாய் என்று கொள்ளலாம். அன்றியும் ஸத்துக்கள் என்பதற்கு நக்ஷத்திரம் என்றும் பொருள். சந்திரன் நன்றாகத் தோன்றியதும் நக்ஷத்திரங்கள் அளவில்லா மகிழ்ச்சியை அடைந்தன என்பதாம். வ்ருத்தியடைந்த ஸத்வம் விச்வத்தை தனது ஞானப்ப்ரகாசத்தாலே காணச்செய்கிறது என்று கொள்ள வேண்டும்.


63. நிசாகரோ வாரிதி நிஸ்வநாநாம்


நிஷ்பாதக: குந்தருசிஸ் சகாசே


உதேஷ்யதஸ் சக்ரப்ருதோ நியோகாத்


ப்ராதுர்பவந் ப்ராகிவ பாஞ்சஜந்ய:


சந்திரனின் உதயத்தால் கடலில் ஓசை கிளம்புகிறது. இத்தகைய நிசாகரன் குருக்கத்திப்பூ போல் விளங்கினான். குருக்கத்தி வெண்மையானது. அதன் வெண்மை நிறம் போன்று ஒளி பெற்று விளங்கினான். 60 வது ஸ்லோகத்தில் சங்கின் வடிவொத்த சந்திரன் என்றார். இதில் சந்திரன் பாஞ்சஜன்யமாகவே இருக்குமே என்கிறார். சக்ரதாரி பிறக்கப்போகிறான் என்பதை அறிந்து கொண்டு ஞானசாரமான சங்கம் முன்னமே தோன்றிவிட்டது. நித்யயோகத்தை உடைய சங்கம் இப்படி பிரிந்து வரலாமோ என்றால் அதற்கு விடையாக நியோகாத் என்கிறார். அதுவும் அவனுடைய ஆக்ஞையே என்றார். அவனுடைய கையில் உள்ள பாஞ்சஜன்யம் போல் தோன்றினான் என்கிறார். பாஞ்சஜன்யம் ஒலித்த வண்ணம் இருக்கும். கடலும் அவ்வாறேயாம். கடலில் பிறந்தவன் பாஞ்சஜன்யன் என்ற நிலையும் உண்டு. அந்த சங்கை கண்ணனே தேடி எடுக்கிறார் அல்லவா? அதேபோல் நித்யயோகமுடைய பாஞ்சஜன்யம் நியோகத்தினால் முன்னம் தோன்றியது. இப்போது சந்திரனை வர்ணிப்பதால் அதனையே உபமானமாக்கியிருக்கிறார்.


64. ம்ருகேண நிஷ்பந்ந ம்ருகாஜிநஸ்ரீ:


ஸ்வபாத விக்ஷேப மிதாந்தரிக்ஷ:


முரத்விஷோ வாமநமூர்த்திபாஜ:


பர்யாயதா மந்வகமத் சசாங்க:


ந்திரனில் ஒருவகையான கறுப்பு தென்படுகிறது. பார்ப்பதற்கு முயல் போல் இருப்பதால் சசாங்கன் என்று சந்திரன் அழைக்கப்படுகிறான். அந்த மிருகம் போர்வை போல் அமைந்திருக்கும். கறுப்பாய் இருப்பதால் க்ருஷ்ண அஜினமாய்த் தோன்றும். முயல் வெண்மையாய் இருப்பினும் சந்திரனுடைய காந்தியில் அது கறுப்பு நிலையை அடைந்துவிட்டது. நோக்கும்போது அது க்ருஷ்ணாஜினத்தை மார்பில் போர்த்தியிருப்பது போல் தோன்றும். வாமனனும் க்ருஷ்ணாஜினத்தை தரித்து யக்ஞவாடத்தில் தோன்றியது போல் சந்திரனும் தோன்றினான். தனது கிரணங்கள் எங்கும் படுவதால் ஆகாசம் முழுவதும் நிறைந்துவிட்டது போல் இருந்தான். வாமன மூர்த்தி இவ்வுலகை அளந்தபோது அவர் திருவடி படாத இடமே இல்லை என்பது போல் சந்திரனும் ஆகாசத்தில் அடிவைத்தபோதே ஆகாசம் முழுவதையும் வ்யாபித்துவிட்டான். இவ்வாறு சந்திரனும் வாமன ஸாத்ருச்யத்தை அடைவான் போலும்.


65. ஜிகாய சங்காச்ரித சைவலாப:


சாருத்யுதேஸ் சந்தரமஸ: கலங்க:


உதீயமாநஸ்ய மஹோர்மி யோகாத்


ஸாமிச்யுதம் ஸாகரமூலபங்கம்


சந்திரன் எவ்வளவு ஒளியுடன் இருக்கிறான். அவன் உதயமாகும்போது களங்கத்துடனேயே தோன்றுகிறான். முன்பு அவனை சங்கெனக் கூறினார். இப்போது களங்கத்துடன் கூடிய சந்திரன் பாசையுடன் கூடிய சங்கம் போல் உளன் என்கிறார். மேலும் களங்கத்தினை ஒருபோதும் அழிக்கமுடியவில்லை. எவ்வளவு அலைகளைக் கொண்டு அலம்பினாலும் அதைப்போக்க இயலவில்லை. பாதாளத்திலிருந்து உண்டான சேறு சந்திரன் மீது படிந்து விட்டது. எந்த அலைகளாலும் அழிக்க முடியவில்லை. பாதிதான் போயிருக்கிறது. மீதி வெற்றியோடு விளங்குகிறது.


66. உதேத்ய துங்காத் உதயாத்ரி ச்ருங்காத்


தமோகஜாந் அக்ர கரேண நிக்நந்


நிசாகரஸ் தந்மத லேப லக்ஷ்மா


ஸிதாபிசு: ஸிம்ஹதசாம் அயாஸீத்


உதயமலையில் உன்னதமான சிகரத்தை அடைந்த சந்திரன் தனது கிரணங்களைப் பரப்பி இருளாகிற யானைகளை அழிக்கலானான். அந்த யானைகளின் மதஜலமானது சந்திரன் மீது அழியாத களங்கமாகப் பதிந்துவிட்டது. அதனால் அவன் ஓர் வகையான சிங்கத்தன்மையைப் பெற்று விட்டான். சூரியனுக்கு உதயாஸ்த சமயங்கள் உண்டு. ஆனால் சந்திரனுக்கு அப்படிச் சொல்ல இயலாது. பௌர்ணமி தொடக்கமாக கிழக்கும் சுக்லபக்ஷத்தில் மேற்கும் தோற்றமாகும். இப்போது க்ருஷ்ணபக்ஷம் ஆனபடியால் சந்திரனுக்கு உதயாத்ரி. சிங்கம் சிகரத்தில் ஏறி வேரிமயிர் முழங்க எப்பாடும் பேர்ந்து உதறி மூரி நிமிர்ந்து புறப்படுமாப்போலே உலகில் உள்ள இருளனைத்தும் போக்க சந்திரன் இருளாகிற யானைகளைத் தனது நுனிக்கரங்களால் பிளப்பது போல் புறப்படுகிறான்.


67. நிசீத லக்ஷ்ம்யா இவ புண்டரீகம்


நிர்வேச ஸிந்தோரிவ பேநசக்ரம்


தம் அந்வவைக்ஷந்த விலாஸ தந்த்ரா:


தாராமணீநாமிவ ஸூதி சுக்திம்


அழகான அர்த்தராத்திரி என்ற லக்ஷ்மியின் கையில் விளங்கும் வெண்டாமரையோ என்கிறார். லழ்மியின் கையில் இருக்கும் தாமரை சிவந்ததாயிற்றே. நான்முகனுக்கும்,கலைமகளுக்கும் அல்லவா வெண் தாமரை என்று கேட்கலாம். இங்கு புண்டரீகம் என்கிறார். இதற்கு வெள்ளைக் குடை என்றும் பொருளாகும். ஆகவே லக்ஷ்மிக்கு பிடிக்கப்பட்ட வெண்குடை என்றும் கொள்ளலாம். ஆனந்தம் என்ற கடலின் நுரைக்குவியலோ, நக்ஷத்திரங்களாகிற முத்துக்கள் பிறக்கும் முத்துச்சிப்பியோ என்று சந்திரனை பலவாறு ரசித்தனர்.


68. உதார தாராகண புத்புதௌக:


சந்த்ரேண ஸம்பந்ந ஸுதாப்ரஸூதி:


அசேஷத்ருச்யாம் அதிகம்ய லக்ஷ்மீம்


ஆலோக துக்தோததிரா பபாஸே


சந்திரனின் ஒளி எங்கும் பரவிவிட்டது. அவ்வொளிப்பரப்பே பாற்கடலோ என்னும்படியாக இருந்தது. பாற்கடலின் தன்மைகள் பல இதில் காணப்பெற்றன. கடலெனில் குமிழிகள் இருக்கும். இங்கும் நக்ஷத்திரங்களின் கூட்டங்கள் குமிழெனக் காணப்பட்டன. அமுதம் தோன்றியது. சந்திரனே அக்கடலில் தோன்றிய அமுதெனக் காணப்பட்டான். அங்கு கமலை பிறந்தாள். இங்கும் உலகெலாம் நேரிடையாகக் கண்டு களிக்கும் சோபை-அழகு-லக்ஷ்மீகரம் நிலைத்திருந்தது.


69. ப்ரகாசயந் விச்வமிதம் யதாவத்


சந்த்ரோதயோத்தீபித ஸௌம்யதார:


ஆஸீந் நிசீதோ ஜகத: ப்ரபூதாத்


அந்தஸ்ய தைவாதிவ த்ருஷ்டிலாப:


இரவு ஒளி பெற்று விளங்குகிறது. உலகத்தையே விளங்கச் செய்கிறது. சந்திரோதயத்தினால் மேலும் பளபளப்பு பெற்ற நக்ஷத்திரங்கள் உலகின் சிறந்ததொரு அத்ருஷ்டமே. குருடனுக்கு கண்பார்வை கிடைத்துவிட்டால் எப்படி இருக்கும்? அவ்வண்ணமே அந்நள்ளிரவு திகழ்ந்தது.


70. விசோதிதாத் விஷ்ணுபதாத் க்ஷரந்தீ


விஷ்வங்முகீ ஸாகர வ்ருத்தி ஹேதோ:


தமோமயீம் ஸூர்யஸுதாம் நிகீர்ய


ஜ்யோத்ஸ்நா நதீ சோணமபி வ்யமுஞ்சத்


நிலவின் பெருமையை இங்கு ஆறாக நிரூபணம் பண்ணுகிறார். விஷ்ணுபதம் என்கிற ஆகாயத்தில் பெருகிய கங்கை போல் ஸமுத்ரம் வ்ருத்தியடைய வேண்டுமென்று விரும்பிய சந்திர நதி நாலாபுறமும் பாய்ந்ததாம். மேலும் கறுப்பான யமுனையை விழுங்கிவிட்டு சிவப்பு நிறமான சோணையை விட்டு விட்டது. சந்திரன் வெளுத்திருப்பதால் ஸத்வமயம். யமுனை கறுத்திருப்பதால் தமோ மயம். ஸத்வம் பாய்கிறபோது தமஸ்ஸும் ரஜஸ்ஸும் நிற்பதில்லை. கங்கை யமுனையோடும், சோணையோடும் கலந்தும், பிரிந்தும் செல்வது நாம் அறிந்ததே! சந்திர நதி ஓடுவதால் இருளும் இல்லை. சிவப்பு நிற்மும் இல்லை.(சோணா தற்போது சோன் என்று அழைக்கப்ப்டுகிறது).


71. ப்ரியாமுகை ஸ்தோமயது ப்ரதிஷ்டம்


பீத்வா நவம் ப்ரீத இவாம்புராசி:


ஸமேத்ய சந்த்ரயுதி நர்த்தகீபி:


தரங்கிதம் தாண்டவம் ஆததாந


நிலவினை கங்கையாகவும்,யமுனை,சோனையைக் கடந்து பின் கடலோடு கலந்தது என்று கூறுகிறார். இங்கு ஆறுகள் புகுந்தபின் கடலில் ஏற்படும் பரம் போக்யமான நிலையை வர்ணிக்கிறார். பிரியையான ஆறுகள் கொடுத்த நீரை மதுவாக வர்ணிக்கிறார். ப்ரியை கொடுத்த தோயமும் மதுவாகலாம். கடலை புருஷனாகவும், நதிகளை பெண்களாகவும் வர்ணிப்பது மரபன்றோ!. இங்கு சமுத்திரராஜன் தனது ப்ரியைகள் கொடுத்த மதுவை நன்றாக குடித்துவிட்டு சந்திரனின் கிரணங்களாகிற நாட்டியக்காரிகளுடன் கூடி தானும் அலை மோதும் தாண்டவத்தைச் செய்யலாயிற்று.


72. கலங்க சித்ரீக்ருதம் இந்துகண்டம்


தமஸ் ஸமத்யாஸித ஸத்வகல்பம்


அசுஷ்க சைவாலமிவாபபாஸே


ஸித்தாபகா ஸைகதம் அர்த்தத்ருச்யம்


சந்திரனின் பாதியுருவம் கலங்கத்தினால் நன்றாகவே தோற்றம் அளிக்கிறது. தமஸ்ஸும், ஸத்வமும் கலந்ததாய் தோன்றுகிறது. உலராத பாசியையுடைய ஆகாசகங்கையின் மணற்பரப்போ என்று சொல்லும்படி விளங்குகின்றது.


73. ஸ்வமத்ய ஸம்பந்ந விசுத்ததாமா


ச்யாமாச ஸா தேவகநந்திநீ ச


தம: க்ஷிபந்த்யௌ ஜகதாம் த்ரயாணாம்


அந்யோந்ய ஸம்வாதம் இவாந்வபூதாம்


ஸ்வசப்தம் ஸ்யாமா என்பது இரவைக் குறிக்கிறது. இரவின் மத்யம் நள்ளிரவு. அப்போது ஒரு விசுத்தமான தெளிவு. ஆயிரம் ஆயிரம் நக்ஷத்திரங்கள் இருந்தாலும் ஒரு சந்திரன் இருந்தால் எவ்வளவு சோபை ஏற்படுகிறது. அஷ்டமி சந்திரன் ஆனாலும் பாதிதான் படும் என்பதில்லை. இவ்வாறு தனது இடையிலேயே விசுத்தமான ஒளியை உடைய அந்த இரவும், தனது இடையிலேயே விசுத்தமான தேஜஸ்ஸையுடைய தேவகியும் மூவுலகங்களில் இருக்கும் இருளை அகற்றியவாறு ஒருவருக்கொருவர் நிகரோ என்று சொல்லலாம்படி அனுபவிக்கப் பெற்றது.


74. சாகாவகாசேஷு க்ருதப்ரவேசை:


சந்த்ராதபை: ஆச்ரிதசாருக்ருத்யை:


ஹதாவசிஷ்டாநி தமாம்ஸி ஹந்தும்


ஸ்தாநம் ததாக்ராந்தம் அம்ருக்யதேவ


கிளைகளின் இடையே சந்திரனுடைய கிரணங்கள் விழுகின்றன. இலைகளின் நிழலும் அங்கு தென்படுகிறது. கிளைகளின் வழியாகச் சென்ற அந்த கிரணங்கள் அழிந்தது போக மிச்சமுள்ள இருளை தேடி அலைகிறது. சந்திரனால் விரட்டப்பட்ட இருளானது எங்கெங்கு ஒளிந்து கொள்ள அவகாசம் கிடைக்குமென தேடி கிளைகளின் அந்தரங்களில் வந்து ஒளிந்து கொண்டன. இந்த இருளினால் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை கண்டுபிடிக்க ஒற்றர்கள் போல் கிரணங்கள் செயல்பட்டு அவை சென்றவிடத்தில் சென்று தேடுகின்றன போலும்.


75. பராக்ருத த்வாந்த நிகாய பங்கை:


பர்யாப்த தாராகண பேந புஞ்ஜை:


அசோபத த்யௌரஸமாயுதஸ்ய


யச:ப்ரவாஹைரிவ சந்த்ரபாதை:


ஆகாயம் மிகவும் அழகாக விளங்கிற்று. சந்திரனின் கிரணங்கள் அவ்வாறு படிகின்றன. அவை சாதாரணமானவை அல்ல. இருளான சேற்றை அறவே அழித்துவிட்டன. எங்கும் குவியல் குவியலாக இருக்கும் நக்ஷத்திரங்கள் நுரையின் குவியல்களோ என்னலாம்படியாக உள்ளது. மேலும் மன்மதனின் புகழ் என்னும் ப்ரவாகமோ என்பது போலவும் இருக்கிறது. அஸமாயுதஸ்ய என்பதற்கு மன்மதனுடைய என்று பொருள். ஐந்து பாணங்களை உடையவன். மலரையே பாணமாகக் கொண்டவன். அம்மாதிரி பிறர் வைத்துக் கொள்ள இயலாது.மேலும் அஸம என்பதற்கு நிகரற்ற என்றும் கொள்ளலாம். இங்கு அஸமாயுதன் என்பது பகவானையும் குறிக்கும். அவனுடைய ஆயுதங்கள் எல்லாம் நிகரற்றவை. ஆதலால் கர்ப்பத்திலேயும் தரித்து வருவான் போலும். தனக்கு சரியில்லாத வேல் முதலானவற்றை கொண்டு கோஸஞ்சாரம் பண்ணுவானாதலால் இவன் அஸமாயுதன். அவன் வருவதற்கு முன்பே அவன் புகழ் ப்ரவஹித்துவிட்டது போன்று சந்திர கிரணங்கள் இருந்தது.


76. ததாநயா திக்ஸரிதாம் ப்ரஸாதம்


ப்ரஸக்த ஹம்ஸாகமயா ஸ்வகாந்த்யா


அபாக்ருத த்வாந்தகந ப்ரவ்ருத்யா


சரத்த்விஷா சந்த்ரிகயா சகாசே


நிலவு மிகவும் ஒளி பெற்றிருந்தது. சரத்ருதுவில் எத்தகைய ஒளி இருக்குமோ அத்தகையதாக இருந்தது. ஆறு போன்ற திக்குகள் எல்லாம் தெளிவைப் பெற்றன. அன்னங்களும் வரத் தொடங்கிவிட்டன- இருள் அறவே அகன்று விட்டபடியால் காரிருளோ, கருமேகமோ வர வாய்ப்பில்லை. ஹம்சாகமயா என்கிறார். அன்னங்கள் வந்து சேரும்படியான தனது ஒளியினால் என்று கொள்ளலாம்.


77. கலாவதா காம விஹார நாட்யே


காலோசிதம் கல்பயதேவ நர்ம


அமோக மாயாபலிதங்கரண்ய:


ப்ராயோ திசாம் தீதிதய: ப்ரயுக்தா:


கலைகளில் வல்லவன் சந்திரன்.அவன் மன்மதலீலைகள் என்பதொரு நாட்டியத்தில் அக்காலத்திற்கேற்ப ஒரு கூத்து நடத்துவான் போலும். அவனுக்கு பிறரைப் பரிஹஸிக்கும் தன்மையும் எதையும் மாற்றிச் சொல்லும் பெருமையும் உண்டு. நாட்டியஸில்பம் தெரிந்த சூத்ரதாரன் அவன். திக்குகளில் அவன் கிரணம் படிகிறது. அவை வெளுத்துக் காணப்படுகின்றன. திக்குகளாகிற பெண்களின் தலைமயிர்கள் எல்லாம் நரைத்துவிட்டன போல் செய்துவிட்டான்.இது காமவிஹார நாட்டியத்தில் சந்திரன் செய்த கேலிக்கூத்தாக அமைந்தது.


77. கதம்பமாலாபி: அதீதலாஸ்ய:


கல்யாண ஸம்பூதிர் அபூத் ப்ரஜாநாம்


ப்ரியோதயஸ்பீதருசோ ரஜந்யா:


ஸந்தோஷ நிச்வாஸ நிப: ஸமீர:


இந்த ஸ்லோகத்தில் சந்திர கலையும், சுகமான காற்றும் கலந்து அதனால் ஏற்படும் சோபையை சொல்கிறார். கடம்ப மரங்கள் வரிசை வரிசையாக இருந்து ந்ருத்யம் பயில்கின்றனவோ! இது காற்றின் விசேஷணத்தினைக் குறிக்கிறது. ஆட்டம் கற்பது கதம்பம். ஆட்டி வைப்பது காற்று. இதனால் மக்களுக்கு ஒருவிதமான ஆனந்தோதயம் ஏற்பட்டது. தனது ப்ரியனான சந்திரனின் உதயத்தால் வெளிச்சம் மிகப்பெற்ற இரவென்னும் மங்கையின் ஸந்தோஷமென்னும் மூச்சுக்காற்றுக்கு நிகராக தெள்ளிய இரவின் மெல்லிய காற்று அமைந்தது.


79. ப்ராயேண ஹம்ஸை: அவதூதஸங்கா


சாருஸ்மிதா ஸம்ப்ருத ப்ருங்கநாதா

ஸர்வோபபோக்யே ஸமயே ப்ரஸுப்தம்

குமுத்வதீ கோகநதம் ஜஹாஸ


இரவில் தாமரை உறங்கும்.ஆம்பல் அலரும்.அன்னங்கள் தாமரையில் நாட்டமுடையவை. ஆதலால் அவை இரவில் ஸஞ்சரிப்பதில்லை. ஆம்பல் ஓடைக்குத்தான் இரவின் பெருமை எல்லாம். ஹம்ஸங்களால் உதறித் தள்ளப்பட்ட ஆம்பல் ஓடை வண்டுகளின் ரீங்காரமும், சந்திரனின் கதிரும் பெற்று புன்னகை செய்கிறது. எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கும் நேரத்தில் கமலம் உறங்குவதேனோ!. ஆம்பல் தன்னொளியால் தாமரையைப் பார்த்து நகைக்கிறது.


80. கலங்க லக்ஷேண ஸமைக்ஷி காசித்


கஸ்தூரிகா பத்ர விசேஷகாந்தி:


ஸுதாம்சு பிம்ப வ்யபதேச த்ருச்யே


முக்தே ரஜந்யா முக புண்டரீகே


இவ்வளவு வர்ணித்தும் சந்திரனின் களங்கம் மனதை ஈர்க்கிறது. அதுவும் ஒரு அழகாகத்தான்உள்ளது.ஒரு பெண்ணின் நெற்றியில் அணிந்த கஸ்தூரிகாபத்ரம் போலுள்ளது. இரவு என்ற பெண்ணின் அழகான, தாமரைப்பூ போன்ற முகத்தில் இடப்பட்டதாம். சந்திரபிம்பம் இங்கு முகமாகிவிட்டது.


81. தலேஷ்வவேபந்த மஹீருஹாணாம்


சாயாஸ் ததா மாருத கம்பிதாநாம்


சசாங்கஸிம்ஹேந தமோகஜாநாம்


லூநாக்ருதீநாமிவ காத்ரகண்டா:


இதில் சந்திரனை சிங்கமாகவும், நிழலை யானைகளாகவும் குறிப்பதோடு நிற்காமல் மரத்தடிகளில் ஏற்படும் அசைவுகளை அழகாக வர்ணிக்கிறார். சந்திரன் சிங்கமானான். அவன் இருளென்னும் யானைகளைக் கொன்று தோலை உரித்து எறிந்துவிட்டான். கீழே விழுந்த யானையின் அறுபட்டு விழுந்த பாகங்கள் துடிப்பது போல மரங்களின் கீழ்பகுதிகளில் வெளுப்பும் கறுப்புமாக அசைவுகள் ஏற்படுகிறதை வர்ணிக்கிறார்.


82. தமஸ் தரங்காந் அவஸாதயந்த்யா


ஸமேயுஷீ சந்த்ரிகயா மஹத்யா


ச்யாமா பபௌ ஸாந்த்ர நவோத்பலஸ்ரீ:


ஸுரஸ்ரவந்த்யேவ கலிந்த கந்யா


முந்திய ஸ்லோகத்தில் நிழல்களின் அசைவுகளைக் கூறினார். இப்போதோ கங்கையும் யமுனையும் கலந்ததோ என்பது போன்று அந்நிலவுடை இரவு விளங்கியதாம். இரவு ய்முனையைப் போன்று கறுத்தும் நிலவு தேவகங்கையைப் போன்று வெளுத்தும் இருக்கிறது. நிலவின் ஒளியில் இருள் அடங்கிவிட்டது. கங்கையின் வெளுப்பு கலந்தபோது யமுனையின் கறுப்பு அடங்கிவிடும். சந்திரிகையோடு கலந்த ச்யாமா கங்கையோடு கலந்த யமுனை ஆயிற்று. ச்யாமா - நல்ல வயதுடைய பெண்ணாக இருளை வர்ணிக்கிறார். இருளாகிற அலைகளை அடக்குவதாயும், மிகப் பெரியதாயும் உள்ள தேவகங்கை போன்றதொரு நிலவுடன் கறுநெய்தல்கள் பூத்துத் தனிச்சிறப்புடைய இரவு என்ற ய்முனை கலந்து ஒரு பெண்ணுக்கு அடங்கின மற்றோர் பெண் போல விளங்கினாள்.


83. ஸ்வவிப்ரயோக வ்யஸநாத் நிபீதம்


ப்ருங்காபதேசேந குமுத்வதீபி:


ஸுதாபிராப்லாவ்ய கரஸ்திதாபி:


ப்ரச்யாவ யாமாஸ விஷம் ஸுதாம்சு:


தனது பிரிவினால் துயருற்று, ஆம்பல் ஓடைகள் வண்டுகளை வாயில் போட்டுக்கொண்டுவிட்டன. வாழமுடியாது என்றெண்ணி விஷத்தையும் குடித்துவிட்டன. (பகலில் ஆம்பல்கள் மலருவதில்லை. மொட்டித்தே இருக்கும். அப்பொழுது அதில் வண்டு சிக்கிக்கொண்டு அதிலேயே இருக்கும். ஆம்பல் வண்டெனும் விஷத்தைக் குடித்துவிட்டன போலும்). சந்திரன் தோன்றினான். தனது காதலிகள் விஷம் குடித்துவிட்டதை அறிந்தான். தனது கையில் உள்ள அமுதத்தை அவர்கள் மீது கொட்டினான். குமுதங்கள் வாய் திறந்தன. அப்பொழுது வண்டுகள் வெளியேறிவிட்டன. ஓஷதீசன் ஆனபடியால் விஷத்தைக் கக்க வைத்துவிட்டான் போலும்.


84. சகாசிரே பத்ர கலா ஸம்ருத்யா


வ்யோமோபமே வாரிணி கைரவாணி


கலங்க த்ருச்ய ப்ரமராணி காலே


ஸ்வநாத ஸாதர்ம்யம் உபாகதாநி


ஓடைகளில் நீர் ஆகாயம் போலுள்ளது. அதில் ஆம்பல் மலர்கள் மலர்ந்துள்ளன. அம்மலர்களிலும் இதழ்கள் கலைகள் போல் நிறைந்து காணப்படுகின்றன. அவற்றில் வண்டுகள் அமர்கின்றன. வெளுத்த அம்மலர்களில் கறுத்த அவ்வண்டுகள் அமரும்போது ஆம்பல்கள் இரவில் தனது கணவனான சந்திரனோடு நிகரான தன்மையையும் பெற்றுவிட்டது போல் இருக்கிறது. ஆகாயமும் நீரும் ஒன்று. சந்திரனும் ஆம்பல் மலரும் ஒன்று. சந்திரனில் உள்ள கலங்கமும் மலரில் உள்ள வண்டும் ஒன்று. ஆக ஆம்பல் சந்த்ரஸாம்யம் பெற்றுவிட்டது.


85. ஸரிந் முகோபாஹ்ருதம் அம்புராசி:


பீத்வேவ தோயம் மது ஜாதஹர்ஷ:


சகார சந்த்ரப்ரதிபிம்பிதாநாம்


கரக்ரஹை:காமபி ராஸலீலாம்


ஆறுகளின் வாயிலாக அளிக்கப்பெற்றதான இனிய நீரினை மது அருந்துவது போல் அருந்திவிட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்த கடலானது சந்திரனின் ப்ரதிபிம்பங்களின் கைகளைப் பிடித்துக் கொண்டு விலக்ஷணமான ராஸலீலை புரிந்தது.


86. ப்ரஸாத பாஜோரு பயோரபூதாம்


உபாவநிர்த்தார்ய மிதோ விசேஷௌ


நபஸ் ஸ்தலே சீதருசிஸ் ஸதாரே


ஸகைரவ தத்ப்ரதிமா ச தோயே


இரண்டு இடங்களிலும் தெளிவு உள்ளது. எது உயர்ந்தது, எது தாழ்ந்தது? என்று உறுதியாகச் சொல்ல இயலாது!. வானில் சந்திரன். அவனைச் சுற்றி நக்ஷத்திரங்கள். அவ்வாறே நீர்நிலையில் ஆம்பல் கூட்டம். அதன் நடுவில் சந்திரன் ப்ரதி பிம்பம். பிம்பம் நன்றாக உள்ளதா? ப்ரதிபிம்பம் நன்றாக உள்ளதா? தீர்மானிக்க இயலாத வகையில் அமைந்துவிட்டது.


87. நபஸ் துஷாராம்சு மயூக யோகாத்


தமிஸ்ரயா மோக்ஷம் அவிந்ததேவ


அத்ருப்யத: தத்வ விதோ நிசாயாம்


அந்தர் முகம் சித்தமிவாத்ம யோகாத்


ஆகாயம் சந்திரனுடைய கிரணம் பெற்ற யோகத்தினால் இருளிலிருந்து விடுதலையை அடைந்தது போலிருந்தது. இதற்கு ஓர் உதாரணம். தத்வஞானிக்கு புற விஷயங்களில் திருப்தி ஏற்படுவதில்லை. ஆத்மாவில் ஏற்பட்ட யோகத்தினால் இரவிலும் அவருடைய உள்ளம் அந்தர்முகமாகவே உள் நோக்கியே இருக்கும். அந்த அஞ்ஞானம் அவரை அண்டுவதில்லை.


88. ஸஹோதிதா சந்த்ரமஸா பபாஸே


ஜ்யோத்ஸ்நா பயோதேருபஜாதராகா


ததாதநே ஸஞ்ஜநநேபி சௌரே:


ஸஹாயிநீ ஸாகர ஸம்பவேவ


சந்திரன் உண்டானான். அவனோடு அவன் ஒளியும் தோன்றியது. அப்பொழுது அது சிவப்பு கலந்திருந்தது. உதயமாகும் பொழுது அந்த ராகம் இருந்தே தீரும். நிறம் மாறினாலும் நிலவில் அதன் குணம் மாறுவதில்லை. இதுதான் ஜ்யோத்ஸ்னா என்ற நிலவு. இப்போது சௌரி பிறக்கப் போகிறான். ராகமுடைய நிலவு அப்போது ஸஹாயமாகவே தோன்றியது. இந்த நிலவு ஸமுத்திரத்தில் தோன்றிய லக்ஷ்மி போல் விளங்கியது. அவளும் சந்திர சஹோதரி. பிறக்கும்போது அனுராகத்துடன் பிறந்தவள் என்பதாம். வக்ஷஸ்தலத்தை அடைந்ததும் வித்யில்லேகை போலானவள். கிருஷ்ணனாக பிறக்கும்போது அவள் ருக்மிணியாக வருவாள் என்பர். இங்கு ஸஹாயினி என்பதற்கும் அதே பொருள்தான்.


89. ப்ரபுத்த தாரா குமுதாப்தி சந்த்ரே


நித்ராண நிச்சேஷ ஜநே நிசீதே


ஸ தாத்ருசோ தேவபதே: ப்ரஸூதிம்


புஷ்யந் பபௌ புண்யதமோ முஹூர்த்த:


நக்ஷத்திரங்கள், ஆம்பல், கடல், சந்திரன், ஆகியவை விழிப்புடன் உள்ளன. மற்றைய உலகெல்லாம் உறங்குகிறது. அத்தகைய நள்ளிரவில் அவ்வளவு சிறப்பான ஒரு முஹூர்த்த வேளை. தேவநாதனின் ப்ரஸவத்தை பலப்படுத்திக் கொண்டு ஏற்பட்டுவிட்டது.இதல்லவோ புண்யதமமான முஹூர்த்தம். பகவதவதார ஸமயம்.


90. பாகேந பூர்வேண தமோமயேந


ப்ரகாச பூர்ணேந ச பஸ்சிமேந


ததா நிசீத: ஸ ஸதாம் ப்ரஸத்யை


ஸம்ஸார முக்த்யோரிவ ஸந்திர் ஆஸீத்


முன் பகுதியில் இருள்மயமானது.பின் பகுதியில் விசேஷமான ப்ரகாசம் உடையது. இத்தகைய இரவு ஸத்துக்களின் உள்ளம் தெளிய அமைந்துவிட்டது. மேலும் இதை ஸம்ஸாரம்- முக்தி இவைகளின் இணைப்பு வேளை என்றே சொல்லலாம்.


91. ப்ராகேவ ஜாதேந ஸிதேந தாம்நா


மத்யோபலக்ஷ்யேண ச மாதவேந


ப்ரகாமபுண்யா வஸுதேவபத்ந்யா


ஸம்பந்நஸாம்யேவ நிசா பபாஸே


இந்த இரவு சாதாரணமானதல்ல. முதலிலேயே வெளுப்பு தோன்றியது. இடையில் மாதவனையும் காண்பிக்கிறது. எவ்வளவு புண்யம். வஸுதேவரின் மனைவியோடு இது ஸாம்யத்தையும் பெற்றுவிட்டது. இது எப்படி விளங்காமல் இருக்கும்? பெருமாளுக்கு முன்னமே தோன்றினான் சந்திரன். ஜோதி வெளுப்பாகத்தானே இருக்கும். க்ருஷ்ணன் என்ற ஜோதி கறுப்பாக அல்லவோ இருக்கும்! அவ்வாறில்லை. இங்கு தாம்நா என்பது பலராமனைக் குறிக்கும். சந்திரன் பலராமன் லக்ஷ்யமாகிறான்.


92. ஸஹ ப்ரதிச்சந்த சசாங்க பேதை:


ஸரஸ்வதாம் தாண்டவிந: தரங்கா:


அவேக்ஷ்ய சௌரேரவதார வேலாம்


ஸந்தோஷ நிக்நா இவ ஸம்ப்ரணேது:


இதற்கு முன் ஸ்லோகத்தில் நள்ளிரவினை தேவகியோடு ஒப்பிட்டார். இப்போது அவதார காலம் நெருங்குவதால் நீர்நிலைகளில் ஏற்படும் பூரிப்பினை வர்ணிக்கிறார். கடல்களில் கிளம்பும் அலைகள் அவதார வேளையை அறிந்து கொண்டு ஸந்தோஷம் தாங்க முடியாதவைகளாய் சந்திரனின் ப்ரதிபிம்பங்களோடு கலந்து குதிப்பும் கும்மாளமுமாக இரைச்சலிடுகின்றன.


93. அவாதிதோதீரித வாத்ய கோஷம்


திசாபிராம்ரேடித திவ்ய கீதம்


ஸதாம் உபஸ்தாபித ஸத்வலாஸ்யம்


ஸங்கீத மங்கல்யம் அபூத் ததாநீம்


ஒரு அழகான சங்கீத விழாவே அப்பொழுது நடைபெற்றது எனலாம்.வாசிக்காமலேயே வாத்ய கோஷம் ஏற்பட்டது. திக்குகள் எல்லாம் சேர்ந்து பாட்டின் ஒலியை ப்ரதிபலிக்கின்றன. ஸத்துக்களுக்கு ஸத்வகுணம் நடமாடுகிறது. மூன்றும் சேர்ந்துதானே சங்கீத விழா.


94. ப்ரதீபிதை: கம்ஸக்ருஹேஷு தீபை:


தாபைஸ்ச பாவேஷு தபோதநாநாம்


அலப்யத க்ஷிப்ரம் அலப்தபங்கை:


அஹேது நிர்வாண தசாநுபூதி:


முன் ஸ்லோகத்தில் வாத்ய கீதங்களை வர்ணித்தார். இங்கு கம்சனுக்கு ஏற்பட்ட அநிஷ்டங்களையும் அதனால் ஸாதுக்களுக்கு ஏற்பட்ட நன்மைகளையும் வர்ணிக்கிறார்.கம்ஸனுடைய மாளிகைகளில் ஏற்றப்பட்டு இருந்த விளக்குகள் யாவும், தபஸ்விகளின் உள்ளங்களில் அணையாது பெருகி வந்த தாபங்களும் காரணமேயில்லாமல் அணையும் தன்மையை அடைந்துவிட்டன.


95. அஜ: ஸ்வஜந்மார்ஹதயாநுமேநே


யாம் அஷ்டமீம் யாதவபாவமிச்சந்


த்விதீயயா பாவித யோகநித்ரா


ஸாபூத் ததாநீம் ப்ரதமா திதீநாம்


அஜன் இப்போது யாதவனாகப் பிறக்கப்போகிறான். தனது பிறப்பிற்கு ஏற்றதாக அஷ்டமி திதியை ஸங்கல்பித்துக் கொண்டான். அஷ்டமி இதனால் ப்ரதமையாகி விட்டாள். ஆதலால்தான் யோகநித்ரை நவமியில் தோன்றினாள். நவமி த்விதியை ஆகிவிட்டது.


எட்டாவது கர்ப்பம் கொல்லப்போகிறது என்ற ஆகாச வாணியை ஸத்யமாக்க எட்டிலேயே பிறக்க எண்ணினார். எட்டாவதாகப் பிறக்கப் போவதாலும் அஷ்டமியை வரித்தார். அஷ்ட வஸுக்களுக்கும் வஸுதேவர், தேவர் என்பதால் அந்நிலையை உணர்த்த அஷ்டமியை விரும்பினார். எட்டு எட்டு என்று எண்ணியே கம்சன் எட்டாத இடத்தை அடையப் போகிறபடியால் அஷ்டமியை தனது ஜன்மத்திற்கு ஏற்றதாக்கினார். அந்த அஷ்டமி திதிகள் எல்லாவற்றைக் காட்டிலும் சிறப்புற்று விளங்கியது. அஷ்டமி ப்ரதமையாவதும் நவமி த்விதியை ஆவதும் ஆச்சர்யம் தானே!.


96. அத ஸிதருசிலக்நே ஸித்த பஞ்சக்ரஹோச்சே


வ்யஜநயத் அநகாநாம் வைஜயந்த்யாம் ஜயந்த்யாம்


நிகிலபுவந பத்மக்லேசநித்ராபநுத்யை


திநகரம் அநபாயம் தேவகீ பூர்வஸந்த்யா


பிறகு சந்திரலக்னத்தில் ஐந்து க்ரஹங்கள் உச்சமாயிருக்கும்போது நல்லவர்களுக்கு வெற்றியை அளிப்பதும் அதனாலேயே ஜயந்தி என்ற பெயர் பெற்றதுமான வேளையில் தேவகி என்ற கிழக்கு ஸந்த்யை அழிவில்லாத சூர்யனை உண்டாக்கிவிட்டது.ஸிதருசி- சந்திரன் அவனும் அப்போதுதான் உதயம் ஆகவே லக்னம் வ்ருஷபமாயிற்று. சந்திரன், செவ்வாய், புதன், குரு,சனி ஆகிய ஐந்து க்ரஹங்கள் உச்சமாயிருக்கின்றன. ரிஷபம், மகரம், கந்யா, கடகம், துலாம் ஆகியவை உச்ச ஸ்தானங்கள். ஐந்து க்ரஹங்கள் உச்சமானால் அவன் லோகநாயகன். அத்புதமாக அவதரித்த அவதார ஸ்லோகம்.


97. அவதரதி முகுந்தே ஸம்பதாம் ஏககந்தே


ஸுரபித ஹரிதந்தாம் ஸ்வாது மாத்வீக திக்தாம்


அபஜத வஸுதேவ ஸ்த்தாநம் ஆனந்த நிக்நை:


அமர மிதுந ஹஸ்தைர் ஆஹிதாம் புஷ்பவ்ருஷ்டிம்



முகுந்தன் அவதரித்து விட்டான். ஸகல விதமான ஐஸ்வர்யங்களுக்கும் ஒரே காரணமாயிருக்கும் முகுந்தன் அவதரித்துவிட்டான். முகுந்தன் எனபதற்கு போகங்களையும் மோக்ஷத்தையும் அளிப்பவன் என்று பொருள். கிழங்கு போன்றவன். மூலகந்தே எனபர். முதற்கிழங்கு என்றும் கொள்ளலாம். முகுந்தன் தான் மூலகந்தம். அவன் அவதரித்தபோது எங்கும் மணம் கமழ்ந்தது. இனிமயும் எங்கும் தோய்ந்தது. ஆனந்த பரவசர்களான தேவர் குழாமெல்லாம் மிதுனங்களாக சொரிந்த மலர் மழையை வஸுதேவ ஸ்தானமானது ஏற்று ஏற்றம் பெற்றுவிட்டது. கம்ஸனின் காராக்ருஹமாக இருந்தபோதிலும் வஸுதேவ ஸ்தானமாதலால் புஷ்பவ்ருஷ்டி. தேவ புஷ்பங்களானதால் கம்ஸாதிகளுக்குப் புலப்படுவதில்லை. இப்போது ஆனந்த நிக்னர்கள் பரவசத்துடன் தம்பதிகளாய் இணைந்து தமது நான்கு கரங்களாலும் மலர்மாரி பொழிந்தனர்.


புஷ்பவ்ருஷ்டியுடன் இந்த ஸர்கம் இனிதே நிறைவுற்றது.



ஸ்ரீ ஹரியே நம;


கவிதார்க்கிக சிம்ஹாய கல்யாண குணசாலிநே


ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்தகுரவே நம:

3 comments:

  1. Awesome work!
    May be should have been a bit formatted and with pics to suit modern taste :)
    இழத்துப் போர்த்தித் தூங்குபர்களையும், தட்டித் தட்டி எழுப்பிய கோதையின் மனசு அல்லவா! அதான் அப்படிச் சொன்னேன்! :)

    இந்தப் பகுதி அருமையா வந்திருக்கு! சுவாமி தேசிகனின் கவித்திறமை மட்டும் அல்லாமல், அவர் சொல் விளையாட்டு, நகைச்சுவை என்று அத்தனையும் இருக்கு!

    //காலோபநீதம் மதுநா ஸமேதம்

    அஞ்சனம் கறுப்பு நிறம். உருவத்தாலும் செயலாலும் கொடூரமானது. மேலும் காலோபநீதம் மதுநா என்கிறார். மது சிகப்பாயிருக்கும். சூரியனும் சிவப்பு. திக்கோ வாருணீ. யானையோ அஞ்சனம். ஆகவே கடல் கபலத்தை விழுங்கிவிட்டது//

    சூப்பர்! :)

    ReplyDelete
  2. கர்ப்ப லட்சணத்தில் துவங்கியது
    கண்ண லட்சணத்தில் நிறைந்தது
    அருமை!

    ReplyDelete
  3. Dear Sir. I saw the first sarkam and made a copy for me to read and understand. Reading the slokas one by one. I will make a copy of this second sarkam too.

    Thanks for your great kainkaryam!

    ReplyDelete